Load Image
Advertisement

கடல்களை ஆராயும் கருவி

An instrument for exploring the seas   கடல்களை ஆராயும் கருவி
ADVERTISEMENT
பூமியைத் தவிர, பிற கிரகங்களின் துணைக்கோள்களிலும் கடல்கள் இருக்கின்றன. உதாரணம், சனியின் துணைக்கோளான என்சிலேடஸ், வியாழனின் துணைக்கோளான யூரோபா. இந்த இரண்டு நிலவுகளின் தரையானது பனிக்கட்டிகளால் மூடப்பட்டுள்ளன.

இந்தப் பனிக்கட்டிகளுக்குக் கீழே கடல்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்தக் கடல்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை ஆராய்வது சவாலான விஷயம்.

இதைக் கண்டுபிடிப்பதற்காகவே, சிறிய நீர்மூழ்கிக் கப்பல் போன்ற ஒரு புதுக் கருவி உருவாக்கப்பட்டு வருகிறது. இது 50 சென்டிமீட்டர் நீளமும், 10 சென்டிமீட்டர் அகலமும் உடையது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிமன் பல்கலை இதை உருவாக்கி வருகிறது. இக்கருவிக்கு, நானோ ஏ.யு.வி., (nanoAUV) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆய்வின் பெயர் ட்ரிப்பிள் நானோ ஏ.யு.வி., 2 திட்டம் (TRIPLE-nanoAUV-2 project) என்பதாகும்.

ஆராயப்படும் கோளின் தரையில் ஒரு நிலையான கருவி பொருத்தப்படும். இந்த நானோ ஏ.யு.வி., கருவி, பனிக்கட்டியைத் துளைத்து, கடலுக்குள் சென்றதும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா வாயிலாக படங்களை எடுத்து வைத்துக் கொள்ளும். மேலும் சில சென்சார் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட இடைவெளிகளில், இது நிலைநிறுத்தப்பட்டுள்ள கருவிக்கு வந்து, தான் சேமித்த படங்களையும், பிற தகவல்களையும் பகிர்ந்து கொள்ளும். அதோடு தன் பாட்டரியையும் சார்ஜ் செய்து கொள்ளும்.

இக்கருவியை 2026ம் ஆண்டு அன்டார்டிகாவின் பனிப்பாறைகளில் சோதனை செய்யப் போகின்றனர். இது 4,000 மீட்டர் ஆழத்திற்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இச்சோதனை வெற்றி அடைந்தால் பிற கிரகங்களை ஆராய்வதற்கு இக்கருவியைப் பயன்படுத்த முடியுமா என்பது தெரிந்துவிடும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement