Load Image
Advertisement

நெஞ்சு எரிச்சலுக்கு மஞ்சள் மருந்து

Turmeric is a remedy for chest irritation   நெஞ்சு எரிச்சலுக்கு மஞ்சள் மருந்து
ADVERTISEMENT
சமையலில் பல ஆண்டுகளாக பயன்படும் மஞ்சள், மருத்துவ குணம் மிக்கது என்பதை நாம் அறிவோம். இது சித்த, ஆயுர்வேத, சீன பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருக்கிறது. மஞ்சள், நெஞ்சு எரிச்சலுக்குக் காரணமான அமில எதுக்கல் நோயைக் கட்டுப்படுத்தும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த சூலாலோங்கோர்ன் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த நோயை உடைய 151 நபர்கள், மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மருந்துகள் கொடுக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டனர்.

ஒரு குழுவுக்குப் பொதுவாக இந்த நோய்க்குப் பரிந்துரைக்கப்படும் 'ஒமேப்ரசோல்' மருந்தையும், மற்றொரு குழுவிற்கு மஞ்சளில் இருந்து எடுக்கப்படும் 'குர்க்குமின்' மாத்திரையையும், மற்றொரு குழுவிற்கு மஞ்சளையும் தந்து 56 நாட்கள் தொடர்ந்து பரிசோதித்தனர்.

ஆய்வின் இறுதியில் மற்ற இரண்டு மருந்துகளை விட மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்பட்டது, எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. மஞ்சளை எந்த வடிவில் பயன்படுத்தினால் நோயைச் சுலபமாகக் கட்டுப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.


வாசகர் கருத்து (2)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    ஏற்கனவே நம்ம ஊரில் மஞ்சளை சிறிது மோரில் கலந்து கொடுக்கும் பழக்கம் இருக்கே

  • DUBAI- Kovai Kalyana Raman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இந்தியா ல எபோயோ கண்டு புடிச்சு மஞ்சள் பயன் படுத்தி கொண்டு உள்ளோம் .. மஞ்சள் கேப்ஸுல் மார்க்கெட்ல இருக்கு, டெய்லி ஒன்னு அல்லது இரண்டு போட்டா எல்லா நோய்க்கும் நல்லது ..ஈஷா மஞ்சள் கேப்ஸுல் ஒரிஜினலா இருக்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement