Load Image
Advertisement

அறிவியல் துளிகள்

Science drops   அறிவியல் துளிகள்
ADVERTISEMENT
* நடப்பு 2023ம் ஆண்டின் ஜூன் - ஆகஸ்ட் வரையான மாதங்களில் பதிவான வெப்பமே, பூமியின் வட அரைகோளத்தில், கடந்த 140 ஆண்டுகால வரலாற்றில் பதிவான அதிகபட்ச வெப்பம் என்று 'நாசா' அறிவித்துள்ளது. இந்த அதீத வெப்பத்தால் தான், இவ்வாண்டில் கனடாவில் காட்டுத் தீயும், ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் வெள்ளமும் ஏற்பட்டன என்றும் கூறியுள்ளது.

* பொதுவாக பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகைகளில் அவர்கள் வரைந்த விலங்குகளின் ஓவியங்கள் நிறைய கிடைக்கும். ஆனால் முதன்முறையாக விலங்குகள், பறவைகளின் பாத அச்சு மட்டுமே செதுக்கப்பட்ட ஓரிடம் ஆப்ரிக்க நாடான நமீபியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை 5,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டவை. பாத அச்சுகளுக்குச் சொந்தமான 90 சதவீத விலங்குகளை ஆய்வாளர்கள் இதுவரை அடையாளம் கண்டுள்ளனர்.

* வெள்ளிக் கோளில் அவ்வப்போது ஏற்படும் ஒளிக்கீற்றுகள், அதன் மேகங்களில் ஏற்படும் இடி, மின்னல்கள் என்றே இதுவரை நம்பப்பட்டது. ஆனால், தற்போது ஆய்வாளர்கள் ஜப்பானின் செயற்கைக்கோளான 'அகாட்சுகி' தந்த தகவல்களையும், அரிசோனா ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளையும் கொண்டு, இந்த ஒளிக்கீற்றுகள் வெள்ளியின் தரையில் இருந்து 100 கி.மீ., உயரத்தில் விண்கற்கள் மோதி, எரிவதால் ஏற்படுகின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

* ஸ்மார்ட் டயர் கம்பெனி எனும் டயர் தயாரிப்பு நிறுவனம் காற்றில்லாத சைக்கிள் டயரை அறிமுகம் செய்துள்ளது. நிலவு, செவ்வாயில் தரையிறங்கிய விண்கலங்கள் நகர்வதற்கு ஏற்ப, பஞ்சர் ஆகாத வகையில் 'நாசா' டயர்களை வடிவமைத்தது. இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த டயர் செய்யப்பட்டுள்ளது. நிக்கல் டைட்டானியத்தாலான ஸ்ப்ரிங் அந்த டயருக்குள் இருக்கும்.

* ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி K2 - 18b எனும் கோளில் கரியமில வாயு, மீத்தேன் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இக்கோள் பூமியை விட இரண்டு மடங்கு பெரியது. நமது சூரியக் குடும்பத்தில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இங்கு உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.


வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    சாதாரண ஸ்பிரிங்குகளை கொண்டு டயர்கள் வடிவமைக்க முடியாதா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement