Load Image
Advertisement

பலம் வாய்ந்த தலைவர் ஜெயலலிதா: லோக்சபாவில் கனிமொழி பேச்சு

Strong leader Jayalalithaa: Kanimozhi speech in Lok Sabha   பலம் வாய்ந்த தலைவர் ஜெயலலிதா: லோக்சபாவில் கனிமொழி பேச்சு
ADVERTISEMENT
''அரசியல் தலைவர்களில் மிகுந்த பலம் மிக்கவர் ஜெயலலிதா. அவர், தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன். இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி லோக்சபாவில் பேசினார்.

பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசியதாவது: மசோதா கொண்டு வந்தது மகிழ்ச்சி தான். ஆனால், எப்போது அமலாகும் என்பது தெரியாதே. அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது மத்திய அரசு. ஒரு ஆண், பெண்ணாக மாறும்போது கடவுளாக கொண்டாடப்படுகிறார். ஆனால், ஒரு பெண், ஆணாக மாறி வீரத்தைக் காட்டினால் அதை ஏற்பதில்லை; பேய் என்று கூறும் நிலை உள்ளது.

பெண்களின் தைரியத்தை மதிக்க மறுப்பது ஏன்? அரசியலில் இந்திரா போன்ற தலைவர் இருந்தாரே. ஜெயலலிதா மிகவும் பலம் வாய்ந்த தலைவர். அவர் தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன். அவரை உறுதியான தலைவர் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை. ஜெயலலிதா மிக மிக பலம் வாய்ந்த அரசியல் தலைவர் தான். இந்த வரிசையில் தற்போது சோனியா, மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் மறைந்த சுஷ்மா சுவராஜ் என பல பெண் தலைவர்களை கூறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -


வாசகர் கருத்து (36)

  • Dv Nanru - mumbai,இந்தியா

    அது எல்லாம் சரி மற்ற காட்சிகளை உதாரணம் சொல்லுறீங்க உங்க கட்சில அது போலெ யாரையும் வளர்த்த விடவில்லையே எனக்காரணம் ஏன் என்றால் அதை தி மு க (கருணாநிதி) விரும்ப வில்லை..நீங்கள் சொல்லுவது போல இந்த லிஸ்ட் நீளவேண்டும் அப்படி ஒன்றும் நடக்கவில்லையே ஏன் இது பார்லிமென்டில் நீங்கள் கூறியது ..அரசியலில் இந்திரா போன்ற தலைவர் இருந்தாரே. ஜெயலலிதா மிகவும் பலம் வாய்ந்த தலைவர். அவர் தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன். அவரை உறுதியான தலைவர் என்று ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை. ஜெயலலிதா மிக மிக பலம் வாய்ந்த அரசியல் தலைவர் தான். இந்த வரிசையில் தற்போது சோனியா, மாயாவதி, மம்தா பானர்ஜி மற்றும் மறைந்த சுஷ்மா சுவராஜ் என பல பெண் தலைவர்களை கூறலாம்.. ஜெஜெலலிதாவை உருவாக்கியது பக்க பலமாக பாதுகாப்பாக இருந்தது நடராஜனும் சசிகலாவும் இல்லை என்றால் கருணாநிதி இப்போதே அரசியல் வாழ்க்கையை முடித்து இருப்பார் ...

  • மாரிமுத்து,சிந்தாமணி மதுரை -

    பொதுவா தாயைப் போல பிள்ளைன்னு சொல்வார்கள் ஆனால் இவர் தந்தையை போல என்று சொல்லலாம் அவரைப் போலவே இவரும் பொதுவாழ்வில் ஒழுக்கசீலி என்று பெயர் எடுத்தவர்.

  • செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர் -

    இந்திராகாந்தியை மதுரையில் மண்டைய ஒடச்சுபுட்டு அடுத்த முணு மாசம் வந்த தேர்தலில் வெட்கமில்லாமல் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருகன்னு சொன்னவரோட மகளுக்கும் அவரை மாதிரிதான புத்தி இருக்கும் ஜெயலலிதா உயிரோட இருக்கும் வரை அவரை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அப்படி பேசி புழுதிவாரி தூத்திவிட்டு இப்ப அவர் பலம்வாய்ந்த தலைவராம் வெட்கமில்லாத பிறவிகள்...

  • Jysenn - Perth,ஆஸ்திரேலியா

    she is sending (not) a subtle message to someone else.

  • angbu ganesh - chennai,இந்தியா

    ithudan sanadanam திருமதி. கனிமொழி அவர்களே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்