Load Image
Advertisement

விழிப்பின்றி விரயம்: வேலை வாங்கி தருவதாக பணத்தை சுருட்டும் கும்பல்

Heedless waste: gangs who use money to buy jobs     விழிப்பின்றி விரயம்: வேலை வாங்கி  தருவதாக பணத்தை சுருட்டும் கும்பல்
ADVERTISEMENT
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி நடக்கும் மோசடிகளில் அதிகளவில் படித்தவர்களே சிக்குவதால் குற்றங்களை தடுக்க பொது மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் நகர்,கிராம பகுதிகளில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் வேலை தேடும் நிலை அதிகளவில் உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தும் மர்ம கும்பல்கள் குறிப்பிட்ட நபர்களை தேர்வு செய்து அவர்களின் அலைபேசி எண்ணிற்கு நல்ல வேலை உள்ளது. நல்ல சம்பளம் என ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதை நம்பும் அப்பாவி பட்டதாரி வாலிபர்கள் அவர்கள் வீசும் வலையில் விழுந்து தங்களிடம் இருக்கும் பணத்தை மர்ம கும்பல்களிடம் கொடுக்கின்றனர். ஒருசிலர் கடன் வாங்கி கொடுக்கும் நிலையும் தொடர்கிறது. சில நாட்கள் கழித்து பணம் கொடுத்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசாரிடம் சென்று புகார் கொடுக்கின்றனர். சிலர் வெளியே தெரிந்தால் அவமானம் எனக்கருதி மவுனமாக கடந்து செல்கின்றனர். போலீசாரும் தங்களால் முடிந்த அளவிற்கு புகார் தாரர்களிடம் விபரத்தை பெற்று கொண்டு பணத்தை மீட்கின்றனர். இதுபோன்ற மோசடி சம்பவங்களில் சிக்கி பணத்தை தொலைப்பது பட்டம் படித்த வாலிபர்களாக இருப்பது தான் வேதனை செயலாக உள்ளது. இதை போலீசார் நினைத்தால் மட்டும் தடுக்க முடியாது. மக்களாகிய ஒவ்வொருவரும் கவனமாக செயல்பட வேண்டும். அலைபேசி தேவையற்ற அழைப்புகளை தவிர்த்தாலே இது போன்ற பிரச்னைகளில் சிக்குவதை தவிர்க்கலாம்.

..........

பேராசை வேண்டாமே

நமக்கு தெரியாத நபர்கள் அலைபேசியில் பேசினால் முதலில் அவர்களின் அழைப்பை துண்டிக்க வேண்டும். தேவையில்லாமல் பேராசை படக்கூடாது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் வங்கி விபரங்களை தெரிவிக்க கூடாது. முடிந்த அளவிற்கு பணம் கொடுத்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதை கைவிட வேண்டும். படித்த இளைஞர்கள் இதுகுறித்து தெரியாதவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மோசடிகளை நடக்காமல் தடுக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மாதவன்,தே.மு.தி.க.,மாவட்ட செயலாளர்,திண்டுக்கல்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement