Load Image
Advertisement

ராணுவ தளவாட உற்பத்தி: இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சு

Military logistics production: US talks with India    ராணுவ தளவாட உற்பத்தி: இந்தியாவுடன் அமெரிக்கா பேச்சு
ADVERTISEMENT
வாஷிங்டன்: ராணுவத்தில் உளவு, கண்காணிப்பு மற்றும் போர் ஆய்வு உள்ளிட்ட பிரிவுகளில் தளவாட பொருட்களை இந்தியாவுடன் சேர்ந்து தயாரிப்பதற்கான ஆக்கப்பூர்வமான பேச்சு நடந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க ராணுவ தலைமையகமாக பென்டகனின் மூத்த அதிகாரியான சித்தார்த் அய்யர், ராணுவ அமைச்சகத்தின் கீழ் வரும் தெற்காசிய கொள்கைகள் துறைக்கான இயக்குனராக உள்ளார்.

இந்திய வம்சாவளியான இவர் கூறியதாவது: ராணுவத்தில் உள்ள ஐ.எஸ்.ஆர்., எனப்படும் உளவு, கண்காணிப்பு மற்றும் போர் ஆய்வு பிரிவுகளில் பயன்படுத்தப்படும் தளவாட பொருட்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ஆக்கப்பூர்வ பேச்சு நடந்து வருகிறது.

இது தொடர்பாக இரு நாடுகளின் இடையிலான ஒத்துழைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பரஸ்பர ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுவதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது இரு நாடுகளுக்கு இடையே, பொருளாதார மற்றும் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (2)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    இந்தியர் சொல்வதில் உணமை இருக்கலாம் நல்லது தான் இரு நாடுகளுக்கும் நனமை பயக்கும்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    புதிய தொழில்கள் வருவது பலருக்கு வேலை வாய்ப்பைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்