Load Image
Advertisement

கவர்னரை நீக்கக்கோரிய படிவங்கள் : ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைப்பு

 Forms for Removal of Tamilnadu Governor Ravi: Submission to Presidents Office   கவர்னரை நீக்கக்கோரிய படிவங்கள் : ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைப்பு
ADVERTISEMENT
தமிழக கவர்னர் ரவியை நீக்கக்கோரி பெறப்பட்ட கையெழுத்துகளை, ஜனாதிபதி அலுவலகத்தில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ ஒப்படைத்தார். தமிழக கவர்னர் ரவியை நீக்கக்கோரி ம.தி.மு.க., சார்பில் கையெழுத்து இயக்கம் ஜூலை 1ல் தேதி துவங்கியது. கம்யூ., மூத்த தலைவர் நல்லக்கண்ணு முதல் கையெழுத்திட்டார்.

தொடர்ந்து எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பொதுமக்கள் உட்பட, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதை ஜனாதிபதி திரவுபதி முர்மு அலுவலகத்தில் ஒப்படைக்க ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கணேசமூர்த்தி எம்.பி., புதுடில்லி வந்தனர்.

கையெழுத்துகள் அடங்கிய பல அட்டை பெட்டிகளுடன் வந்த வைகோ கூறியது:

கவர்னர் ரவி அரசியல் சட்ட விதிகளுக்கு முரணாகவும், அரசியல் உள்நோக்கத்துடனும் செயல்படுகிறார். அவரை திரும்பப்பெறக்கோரி, 55 எம்.பி.,க்கள், 35 எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி தலைவர்கள் உள்ளிட்ட, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதை வழங்க ஜனாதிபதியிடம் நேரம் கேட்கப்பட்டது. பலமுறை கேட்டும் நேரம் இல்லை என, தெரிவிக்கப்பட்டது.
இதனால் இவற்றை ஜனாதிபதி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க உள்ளோம். ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கிறாரா, இல்லையா என்பதை விட தமிழக மக்களின் எண்ணத்தை தெரியப்படுத்த வாய்ப்பளிக்க மறுக்கப்படுவதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மத்திய அரசின் அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி முறிவு குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க வைகோ மறுத்தார்.


- நமது நிருபர்-


வாசகர் கருத்து (14)

  • enkeyem - sathy,இந்தியா

    வாய்தா போன இந்த கல்லத் தோணி புகழ் சைக்கோ கொடுத்துள்ள இந்த படிவங்களால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று அவர்களுக்கே தெரியும். இருந்தாலும் நானும் ரவுடிதான் என்று மக்களுக்கு காட்டிக்கொள்ள இந்த உதார் எல்லாம் செய்ய வேண்டியுள்ளது.

  • vadivelu - thenkaasi,இந்தியா

    ஏழு கோடி மக்களில் ஐம்பது லட்சம் கையெழுத்து... நல்லா விளங்கும்.

  • jagan - Chennai,இலங்கை

    சிறிய ரூமில் வைக்கத்தான் இந்த பேப்பர் பயன்படும் . அமெரிக்காவில் எல்லாம் பப்பேர் தானாம் தண்ணி அந்த ரூமில் இருக்காதாம்

  • sankar - Nellai,இந்தியா

    ஆமாம் - அஞ்சு வயசு பிள்ளைகளிடம் கூட கையெழுத்து வாங்கியதை பார்த்தோமே

  • vbs manian - hyderabad,இந்தியா

    நாளைக்கே பிரதமரை நீக்க வேண்டும் என்று ஒரு கோடி கையெழுத்து பெற்று சமர்பிப்பார். இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக ஒரு கோடி இரண்டு கோடி கையெழுத்து வாங்கும் உத்திகள் உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement