Load Image
Advertisement

இந்த செப்டம்பரில் ரூ.15,000-க்குள் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்!

Awesome smartphones under Rs 15,000 this September!   இந்த செப்டம்பரில் ரூ.15,000-க்குள் கிடைக்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்!
ADVERTISEMENT
நல்ல ரேம் மற்றும் சிப்செட் உடன் வாங்கும் ஸ்மார்ட்போன்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகளே நீடிக்கின்றன. எனவே ஸ்மார்ட்போனுக்கு 50 ஆயிரம், 60 ஆயிரம் எதற்கு செலவு செய்ய வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு ரூ.15 ஆயிரம் பட்ஜெட்டுக்குள் பாசிடிவ் விமர்சனங்களை பெற்ற போன்களை இங்கே தந்துள்ளோம்.

ரெட்மி 10 பிரைம் (Redmi 10 Prime) - ரூ.10,999



Latest Tamil News இதில் மூன்று முக்கிய விஷயங்கள் உள்ளன. முதலில், ஃபோன் ஒரு சக்திவாய்ந்த சிப்பைக் கொண்டுள்ளது. அது ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88. இது எந்தவொரு ஆப் அல்லது கேமை திறம்பட பயன்படுத்த உதவும். இரண்டாவதாக, வீடியோ பார்ப்பதற்கு சிறந்த ஒரு டிஸ்ப்ளே பேனலை இந்த ஃபோன் வழங்குகிறது. மூன்றாவதாக, இதன் பேட்டரி திறன் இந்த பிரிவில் சிறந்த ஒன்று. 6000 எம்.ஏ.எச்., பேட்டரி கொண்டது. இதன் முதன்மை கேமரா படங்களை 50 எம்.பி., வரை பிராசஸ் செய்யக் கூடிய லென்ஸ் கொண்டுள்ளது. இது தவிர 3 லென்ஸ்கள் என குவாட் கேமரா அமைப்புடையது. செல்ஃபி கேமரா 8 எம்.பி., திறன் கொண்டது.

போக்கோ எம்4 5ஜி - ரூ.10,999



இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் சிறந்த 5ஜி போன் எனலாம். 6.58-இன்ச் எல்சிடி பேனல் மற்றும் முழு HD+ திறன் கொண்ட டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்.ஓ.சி., என்ற சிப்செட், 50MP சென்சார் கொண்ட பிரதான கேமரா, செல்ஃபிக்களுக்கு, 8MP சென்சார் கொண்ட கேமரா, 5,000mAh பேட்டரி, 18W வேகமான சார்ஜிங் ஆகிய வசதிகள் இதில் உண்டு.

மோட்டோ ஜி40 ஃப்யூஷன் - ரூ.12,990



மோட்டோரோலாவின் சிறந்த பட்ஜெட் போன்களில் இதுவும் ஒன்று. இதன் டிஸ்பிளே மிகப்பெரியது. 6.8 இன்ச் அதாவது 17.3 செ.மீ., ஓடிடியில் படங்களை பார்க்க, யுடியூப் வீடியோக்களைப் பார்க்க சலிக்காது. 64 எம்.பி., முதன்மை கேமரா, 16 எம்.பி., செல்ஃபி கேமரா உண்டு. பேட்டரியின் திறன் 6000 எம்.ஏ.எச்., டர்போ சார்ஜிங் கொண்ட சி டைப் போர்ட் உடன் வருகிறது. ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 732ஜி சிப்செட் கொண்டுள்ளது.

விவோ டி2எக்ஸ் - ரூ.12,999



Vivo T2x ஆனது 6.58-இன்ச் முழு HD+ எல்.சி.டி., டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6020 எஸ்.ஓ.சி., சிப்செட் மூலம் இந்த ஃபோன் இயங்குகிறது. இதில் 8ஜிபி ரேம் வரை உள்ளது. மெமரியும் 128 ஜிபி வரை உள்ளது. 50 எம்பி சென்சார் உடைய முதன்மை கேமரா மற்றும் செல்ஃபிக் கேமரா 8 எம்.பி., கொண்டது. 5,000எம்.ஏ.எச்., பேட்டரி மற்றும் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது.

ரியல்மீ 10 - ரூ.13,499



இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 எஸ்.ஓ.சி., சிப் உள்ளது. 8GB வரை ரேம் வரை சாய்ஸ்கள் தரப்படுகின்றன. முழு எச்டி+ ஆமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடைய ஸ்மார்ட்போன் இது. முதன்மை கேமரா 50எம்பி, முன்பக்க கேமரா 16எம்பி உடையது. 5000 எம்.ஏ.எச்., பெரிய பேட்டரி கொண்ட இதற்கு 33 வாட்ஸ் சார்ஜர் தருகின்றனர்.

ரெட்மீ 12 5ஜி - ரூ.11,999



இந்த போனில் அதிநவீன இணையசேவைக்கான 5ஜி அம்சம் உண்டு. புதிய ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 6.71-இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி உள்ளது. டைப் சி பாஸ்ட் சார்ஜிங் உடையது. முதன்மை கேமரா 50 எம்.பி., சென்சார், செல்பி கேமரா 8 எம்.பி., திறன் உடையது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement