ADVERTISEMENT
நியூயார்க்: ஐ.நா., பொது சபையில் துருக்கி அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன், 'காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும்' என பேசியுள்ளார். இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.நா., பொது சபையின் 78வது அமர்வு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் விவாதங்கள் நடைபெறும். அந்த வகையில், இக்கூட்டத்தில் பங்கேற்ற துருக்கி அதிபர் ரிசெப் டாயிப் எர்டோகன் பேசும்போது, காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.
அவர் பேசுகையில், ''பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்க தயாராக உள்ளது'' என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக ஐ.நா.,வில் எர்டோகன், காஷ்மீர் பிரச்னையை எழுப்பி வருகிறார். இதற்கு இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன், 'பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்றுக் கொள்ள வேண்டும்' என இந்தியா கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் துருக்கி இந்த சிக்கலை கிளப்பியிருப்பதால், இந்தியாவின் நகர்வை அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (16)
இப்போ அமைதி இல்லையா, உங்களுக்கு தெரியுமா. உங்க நாடு கடலுக்குள்ள போகுது பொய் அதுக்கு முட்டு குடுத்து தாங்குங்க முதலில்...
மோடி சார் இது உங்களுக்கு தேவை, உதவி செய்ய வேண்டாம்னு சொன்னா கேட்டீங்களா?
நம்ம ஊரில் உள்ள முஸ்லிம்கள் அவனுக்கு புரியுmபடி எடுத்துரைத்தாள் போதும் மூடிக்கிட்டு இருப்பான்
சர்வதேச வழித்தடத்தில் அவர்கள் நாட்டை புறக்கணித்ததால் ஏமாற்றத்தில் வந்த விமர்சனம். இவர்கள் கருத்து நமக்கு தேவையில்லை.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
தீயவர் நட்பு என்றும் கேடு விளைவிக்கும்.