Load Image
Advertisement

ஃபயர் போல்ட் அவலன்சே; லக்ஸுரி லுக்கில் ஓர் பட்ஜெட் வாட்ச்!

Fire-Boltt Avalanche With Bluetooth Calling, IP67 Rating Launched ஃபயர் போல்ட் அவலன்சே; லக்ஸுரி லுக்கில் ஓர் பட்ஜெட் வாட்ச்!
ADVERTISEMENT

ஃபயர் போல்ட் நிறுவனத்தின் அவலன்சே (Fire-Boltt Avalanche) ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஃபயர் போல்ட் நிறுவனம் இந்திய கேட்ஜெட் சந்தையில் மிகவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இதன் ஸ்மார்வாட்ச்கள் பட்ஜெட் விலையில் ப்ரீமியம் டிசைனை கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் எளிதில் வரவேற்பை பெற்றது. அதன்படி, ஃபயர் போல்ட் நிறுவனம் தனித்துவமான ப்ரீமியம் லுக்கில் ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது, ஃபயர் போல்ட் அவலன்சே எனும் ஸ்டைன்லெஸ் ஸ்ராப் கொண்ட முற்றிலும் ப்ரீமியம் டிசைனில் புதிய வாட்ச்சை இந்திய சந்தையில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Latest Tamil News

இதன் டிசைனை பொறுத்தவரை, 1.28 இன்ச் (240 x 240 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே, சின்க்-அலாய் பிரேம் (Zinc Alloy Frame) டிசைன் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப் (Stainless Steel Strap) அமைப்பை கொண்டுள்ளது. அதுபோக, கன்ட்ரோல்களுக்கு ஒரு ரோட்டேட்டிங் கிரவுன் (1 Rotating Crown) மற்றும் 2 ஃபுஸ் பட்டன்கள் (Push Buttons) கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், இதில், 100+ கிளவுட் பேஸ்ட் வாட்ச் பேஸ்கள் (Cloud Based Watch Faces), 4 வகையான ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitor)கொடுக்கப்பட்டுள்ளன.
Latest Tamil News

அதன்படி, ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஹார்ட் ரேட் டிராக்கிங் மானிட்டர் (Heart Rate Tracking Monitor) உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling) கால் ஹிஸ்டரி (Call history), குயிக் டயல் பேட் (Sync Contacts) மற்றும் சிங்க் காண்டாக்ட் (Sync Contacts) சப்போர்ட் என எக்கசக்க அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதோடு முக்கிய அம்சமாக ஃபயர் போல்ட் ஸ்மார்ட்வாட்ச்சில் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant support) வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
Latest Tamil News

மேலும், வுமன் ஹெல்த் மானிட்டர் (Women Health Monitor), ப்ரீதிங் எக்சர்சைஸ் மோட் (Breathing Exercise Mode) , ஸ்மார்ட் ரீமைண்டர் (Smart Reminders), டிரிங்கிங் வாட்டர் ரீமைண்டர் (Drink Water Reminder) மற்றும் செடண்டரி ரீமைண்டர் (Sedentary Reminder) உள்ளிட்ட வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக, வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), கால்குலேட்டர் (Calculator), மியூசிக் மற்றும் கேமரா கன்ட்ரோல், அலாரம் (Alarm), மற்றும் ஸ்டாப்வாட்ச் (Stopwatch) ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Latest Tamil News
பேட்டரி பேக்கப்பை பொறுத்தவரை, ஒரு ஃபுல் சார்ஜில் தொடர்ந்து 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக் கூடிய220mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Dust and Water Resistant) வசதி வருகிறது. இந்த ஃபயர் போல்ட் அவலன்சே ஸ்மார்ட்வாட்ச் பிளாக் (Black), பிளாக் கோல்டு (Black Gold), பிளாக் சிலிகான் (Black Silicone), ப்ளூ (Blue), ப்ளூ ரெட் (Blue Red) மற்றும் கோல்டு பிளாக் (Gold Black) என 6 நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.2,399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement