சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் கடந்த செப்.,15ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அதேநாளில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு வீடியோ கான்பரன்சிங் வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
மனு தள்ளுபடி
அப்போது, செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து, செப்., 29 வரை சிறையில் அடைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டு இருந்தார். இதற்கிடையே ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனு குறித்த தீர்ப்பு இன்று (செப்.,20) அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று ஜாமின் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். மேலும் அவர், மனு தள்ளுபடிக்கான காரணங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (29)
திமுக, "பாஜக வுடன் கூட்டணி" என்று அறிவித்தால் போதும், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, இந்த ஊழல்பேர்வழி குற்றமற்றவர் என்று விடுவிக்கப்படுவார்.
செந்தில் பாலாஜிக்கு இலாக்கா இல்லாத மந்திரி பதவி . ஆந்திராவில் சந்திர பாபுவுக்கு சிறை thandanai
நீதிபதி ஆனந் வெங்கடேஷ் Effect . இப்போ எல்லா நீதிபதியும் சூப்பர் ஸ்டார் ஆக பார்க்கிறார்கள் . இது நல்லதே. TN சேஷனுக்கு அப்புறம் EC ன் பவர் எல்லாருக்கும் புரிந்த மாதிரி தான். அரசியல்வாதியை தண்டித்தால் மக்களிடம் ஹீரோ
Will the "Sanathana Coils" take away his ministership at least now & save tax payers money or will the Coils wait till the SC dismisses SB's bail plea. There will be more attack on Sanathana Dharma to divert the attention of the people.
Shoot first...ask questions later... அமெரிக்க மாடல்.