Load Image
Advertisement

தண்ணீர் விடமுடியவில்லை கண்ணீராவது விடுகிறோம்...

Latest Tamil News

கர்நாடக மாநிலம் தண்ணீர் இல்லை என்று கைவிரித்துவிட்ட நிலையில், நாகை மாவட்டத்தின் கடை மடை பகுதி விவசாயம் பாழ்பட்டு பாலைவனமாகி வருகிறது.

விவசாயிகள் கருகும் பயிர்களைப் பார்த்து தண்ணீர் விடமுடியாமல் கண்ணீர்விட்டு வருகின்றனர்.

ஊழல் செய்து கோடிக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துள்ள அரசியல்வாதிகளுக்கு விவசாயிகளின் கண்ணீர் பற்றியும் கவலையில்லை,விவசாயம் பற்றியும் புரிதலில்லை.
Latest Tamil News
இதை வைத்து அரசியில் செய்வார்களே தவிர மனசாட்சிப்படி செயல்பட்டு தீர்வு காணமாட்டார்கள்.

இருப்பதைவிற்று அதுவும் போதாமல் கடன் வாங்கி விதை விதைத்து உரமிட்டு வளர்த்த பயிர்கள் விளைந்தால் மட்டுமே மீளமுடியும் என்ற நிலையிலுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் கர்நாடக மாநிலம் விளையாடுகிறது.

இன்னும் பத்து நாள் தண்ணீர்விட்டால் கூட பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலையில் தண்ணீரை நிறுத்தியது மிகப்பெரிய இழப்பை தரும் என்கின்றனர். பயிர்களோடு சேர்ந்து நாங்களும் கருக வேண்டியதுதான் என்று கண்ணீர்விட்டு உருகுகின்றனர்.
Latest Tamil News
விதை தெளித்து இருமுறை உரமிட்டு, களையெடுத்து தற்போது 60 நாட்களாகி விட்டது. ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்தேன். குறுவை 70 நாட்களில் சூல் பருவம். கதிர்கள் வெளியில் வரும்.60 நாட்களாகி விட்ட நிலையில் இதற்கு மேல் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வந்தால் மட்டுமே முடியும் என்று நா தழுதழுக்கிறார், கண்ணன் என்ற விவசாயி.எல்லா விவசாயிகளின் நிலமையும் இப்படித்தான்.

கடைமடை பாசன விவசாயிகள் சங்க தலைவர் தமிழ்செல்வன் கூறுகையில், கர்நாடகம் மாதந்தோறும் தர வேண்டிய தண்ணீரை திறந்து விடாமல், வெள்ள நீரை வெளியேற்றும் வடிகாலாகவே தமிழகத்தை பயன்படுத்தி வருகிறது. கருகும் பயிர்களை காப்பாற்ற உச்ச நீதி மன்ற தீர்ப்பின் படி கர்நாடகம் திறக்க வேண்டிய காவிரியின் உரிமை பங்கு நீரை தினந்தோறும் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அடிப்படையில் பகிர்ந்து அன்றே தமிழகத்திற்கு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த பாவப்பட்ட மக்களுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்கச் செய்திடவேண்டும் இல்லாவிட்டால் விவசாயமும்,விவசாயிகளும் பெரிய அளவில் பாதிக்கப்படுவர் அது நம்மிடம்தான் எதிரொலிக்கும்.

படங்கள்:கருணாகரன்

-எல்.முருகராஜ்


வாசகர் கருத்து (7)

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  சாகுபடி செய்ய வேண்டாம் எங்களால் நீரை பெற்று தர முடியவில்லை என்று தமிழக அரசு முன்பே சொல்லி இருந்தால், நஷ்டமும், மன உளைச்சலும் விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்காது.

 • veeramani - karaikudi,இந்தியா

  ரெம்ப சிம்பிள்.. காவேரி ஆணையத்தை மைய்ய அரசிடம் கொடுத்துவிட்டால் போதும். நீர் வள துறை சரியாக கையாளும். காவேரி நீருக்கு கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி மட்டும்தான் . இதில் திருச்சி, தஞ்சை மாவட்டங்கள் இரண்டு போகம். நாகை, திருவாரூர் , புதுச்செய- காரைக்கால் ஒரு போகம். இதற்கும் தண்ணீர் இல்லையென்றால் .....

 • Thetamilan - CHennai,இந்தியா

  பஞ்சாபி, டெல்லி , குஜராத், ஹரியானா, ஹிமாச்சலில் ஏற்கனவே கனநீர் விட்டார்கள். இனியும் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்

 • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

  கடலில் காசினை கொட்ட ஆசைப்படும் அரசியல்வாதிகளை தெரிந்து எடுத்தது எவ்வளவு தப்பு என்று இப்போதாவது உணருங்க , உங்களோட வலி அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு என்று இறுமாந்து உட்கார்ந்து இருக்கும் நெபொடிச அரக்கர்கள் அவர்கள் . பண்புள்ளவர்களை தெரிந்து எடுங்க மக்களே திருடர்களை அல்ல என்று இப்போதாவது உணருங்க , அணைகளும் ஏரிகளும் எவ்வளவு முக்கியம் என்று வாழந்த மன்னர்கள் நாட்டில் இன்று ஓங்கோல் திருடர்கள்

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  வோட்டு போட்டு திமுகவை தேர்ந்தெடுக்கும்போது இது தெரிந்திருக்க வேண்டும். பணத்திற்காக மானத்தையும், விவசாயத்தையும் அடகு வைத்துவிட்டு இப்போது அழுதால் யாருக்கும் கருணை வராது. உங்களுக்காக பேச இந்த அரசு தயாராக இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement