ADVERTISEMENT
நியூயார்க்: போரின் போது குழந்தைகளை ரஷ்யா தாக்குகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 78வது ஐ.நா. பொது சபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசியதாவது: உணவு உள்ளிட்ட பல விஷயங்களை ஆயுதம் ஆக்கி ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. போரின் போது குழந்தைகளை ரஷ்யா கடுமையாக தாக்குகிறது. ரஷ்யாவின் வாக்னர் என்ற கூலிப்படை அமைப்பின் தலைவர் பிரிகோஷின், விமான விபத்தில் கொல்லப்பட்டதில் புடினுக்கு தொடர்பு இருக்கலாம்.
ரஷ்யா உலகை இறுதிப் போருக்குத் தள்ளும். அதே வேளையில்எந்த நாட்டையும் தாக்கத் துணிய மாட்டார்கள். உக்ரைன் இடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ரஷ்யா பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை நாடு கடத்தியது.
இந்த குற்றத்திற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு கைது வாரண்ட்களை பிறப்பித்தது. நாங்கள் குழந்தைகளை வீட்டிற்குத் திரும்பப் பெற முயற்சிக்கிறோம். இவ்வாறு ஜெலன்ஸ்கி பேசினார்.
வாசகர் கருத்து (3)
Plz Surrender to russia. UNO waste . they ever do anything . normal people I,know about UNO.BUT ukraine president not know.
ஒரு கோமாளியை நாட்டின் அதிபர் ஆக்கினால் ... இப்படி தான் நாடு சீரழியும் ..... உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுகிறான் இவன் !!!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இது போன்ற கோமாளிகள் இந்தியாவிலும் உண்டு. பெயர் ராகுல்..