Load Image
Advertisement

திடீர் விலை உயர்வை அறிவித்த மஹிந்திரா; கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Mahindra XUV700, Scorpio-N, Thar, XUV300 prices hiked again திடீர் விலை உயர்வை அறிவித்த மஹிந்திரா; கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
ADVERTISEMENT
மஹிந்திரா (Mahindra) நிறுவனம் தனது எஸ்யூவி கார்களின் விலையை அதிரடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவின், மிகப்பெரிய கனரக மற்றும் பயணிகள் கார் உற்பத்தி நிறுவனமான, மஹிந்திரா எஸ்யூவி கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. இதன் எஸ்யூவி கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், இதன் கம்பீரமான தோற்றமும், பில்டு குவாலிட்டியுமே எஸ்யூவி கார் பிரியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக இதன் டாப் மாடல்களான, ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) மற்றும் மஹிந்திரா தார், (Mahindra Thar) உள்ளிட்ட மாடல்கள் அதிகமான வாடிக்கையாளர்களை தன்வசப்படுத்தியுள்ளது.


Latest Tamil News

இந்நிலையில் மஹிந்திரா நிறுவனம் தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது. அதாவது, மஹிந்திரா நிறுவனம் அதன் ஸ்கார்பியோ-என் மற்றும் தார் வாகனங்களின் விலைகளை அதிரடியாக அதிகரித்து உள்ளது. அதன்படி, ஸ்கார்பியோ-என் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சுமார் ரூ.81,000 வரை உயர்த்தப்பட்டுள்ளன.


Latest Tamil News

ஸ்கார்பியோ-என் காரின் இசட்4 4-வீல்-டிரைவ் மிட் வேரியன்ட்டுக்கே ரூ. 81,000 விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இசட்2 எனும் என்ட்ரி லெவல் வேரியன்டின் விலை ரூ.52,199 அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதன் டாப் வேரியன்டான இசட்8எல் வேரியன்ட்டின் விலை வெறும் ரூ.1,995 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபக்கம் ஸ்கார்பியோ கிளாசிக்கின் எஸ்11 வேரியன்ட்டின் விலை ரூ.24,000 மட்டுமே உயர்த்தப்பட்டு ரூ.17.05 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Latest Tamil News
அதேசமயம் மஹிந்திராவின் புகழ்பெற்ற ஆஃப்ரோடு மாடலான, தார் எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.44,000 வரையில் உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ஏ.எக்ஸ் (ஆப்ஷ்னல்) 2-வீல்-டிரைவ் மேனுவல் வேரியன்ட் காருக்கு ரூ.44,000 ஆகவும் எல்.எக்ஸ் 2-வீல்-டிரைவ் ஆட்டோமேட்டிக் (பெட்ரோல்) வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.28,000 ஆகவும், இதுதவிர, மற்ற வேரியன்ட்களின் விலைகள் அனைத்தும் ரூ.16,000 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதனால், தாரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.98 லட்சமாக அதிகரித்துள்ளது.


மஹிந்திரா நிறுவனத்தின் இந்த அதிரடி விலை உயர்வால் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • KC Arun - Tirunelveli,இந்தியா

    தோற்றத்தினால் நீங்கள் கவரப்படுகிறீர்கள். இதில் போனாலே ஒரு கெத்து என அனைவரும் நினைக்கிறார்கள். மற்றபடி குடுக்கிற காசுக்கு ஒர்த் இல்லை இந்த கார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement