ADVERTISEMENT
வாஷிங்டன்: பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில், கனடா எவ்வளவு முயன்றும், இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‛காலிஸ்தான் டைகர் போர்ஸ்' என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு, 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியா - கனடா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க நாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனது நட்பு நாடுகள், இந்தியாவிற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கனடா விரும்பியது.
முக்கியமாக அமெரிக்கா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கனடா சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை ஏற்க பைடன் நிர்வாகம் மறுத்துவிட்டது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (29)
உதயநிதி வாயை திறந்தால் கைது செய்ய nia தயாராக உள்ளது
ஒரு வேளை இந்தியாவே தீவிரவாதியின் கொலையில் சம்பந்தப்பட்டிருந்தாலும் அது எப்படி தவறாகும்? பின்லேடனை அமெரிக்கா பாகிஸ்தானில் பகிரங்கமாக கொலை செய்து மார்தட்டிக்கொள்ளவில்லையா?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உடனே பதவி விலகவேண்டும். பயங்கரவாதத்திற்கு துணைபோகும் ஆள் பதவியில் நீடிக்கும் உரிமை இல்லை.
காலிஸ்தானுக்கள் உள்ளவைங்களே போட்டு தள்ளிருப்பாங்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கனடா பிரதமர் இவ்வாறு பாரதத்தின் மீது, சேற்றை வாரி வீச முழு காரணம், நம் எதிரி நாடுகள் மற்றும் உள்நாட்டில் உள்ள மூன்றாம்தர பிரிவினைவாதம் பேசும் அரசியல் கட்சிகள் தான்.. ஜெய் ஹிந்த்..