மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா பேசியதாவது: நாட்டின் சுதந்திரத்தில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது. ஆண்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ராஜிவ் தான் முதலில் கொண்டு வந்தார். அவரின் கனவாக இந்த மசோதா இருந்தது. ஆனால், அவரது கனவு இன்னும் நினைவாகவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. அதுபோல தற்போதைய மசோதா இல்லை. இந்த தருணம் உணர்ச்சிகரமான தருணம். தற்போது மகிழ்ச்சி இருந்தாலும் கவலையும் உள்ளது.
நாட்டில் பெண்களின் முக்கியத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். உடனடியாக இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இனியும் தாமதப்படுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இட ஒதுக்கீடு மசோதாவிற்காக பல ஆண்டுகள் பெண்கள் காக்க வைக்கப்பட்டனர்.

ஓபிசி பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன். ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். இவ்வாறு சோனியா பேசினார்.
வாசகர் கருத்து (36)
இப்போ ...ஏபிசி ... ஓபிசி...என்று கதை அளக்கும்....இத்தாலி ...அம்மாவும் ...மகனும் ...நீங்கள் ..அதாவது காங்கிரஸ்..50 ஆண்டு கால ஆட்சியில் இருந்த போது என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் ??? ...எல்லோரையும் ...எப்போதும் ஏமாற்ற முடியாது !!!!
ஒரு உயர் மட்டத்தில், சுதந்திரத்திற்கு முந்தைய காலம் முதல் இன்று வரை பாரதத்தை நடத்திக் கொண்டிருப்பவர் யார்? 1948/49 வரை முன் ஐடி - பிரிட்டிஷ் ஏஜென்சி MI6 - உள்ளூர் ஏஜென்ட் தோட்டி மற்றும் 555 சிகரெட் Gulabi Poriki cheecha Lehru 950 - 1991 - US நிறுவனம் CIA மற்றும் USSR ஏஜென்சி, KGB - உள்ளூர் முகவர் - முதலில் பேகம் மற்றும் பின்னர் BAR தொழில்முறை அன்டோனியோ மைனோ சோனியா 1991 - 2014 - சிஐஏ மற்றும் சீன ஏஜென்சி எம்எஸ்எஸ் - உள்ளூர் முகவர் BAR நிபுணத்துவம் அன்டோனியோ மைனோ சோனியா 2014... இன்றுவரை, 1000 வருட வரலாற்றில் முதல் முறையாக பாரதத்தின், இப்போது பாரதத்தால் ஆளப்படுகிறது
மேடம் நீங்கள் இதைய்ய கூறுமுன்பு உங்கள் கட்சியின் சார்பில் அதைய்ய செய்து காட்டுங்ள் பிறகு கோரிக்கை வைக்கலாம் சும்மா வீம்புக்கு ஏதோ கூற வேண்டுமென்று சபை நேரத்தை கெடுக்க வேண்டாம்
வேண்டுமென்றே பல வரைமுறைகளை கொண்டுவந்து ஏதோ பெண்களுக்கு நல்லது செய்ய போறது மாதிரி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தடை செய்வதற்காவே சோனியா முயற்சி செய்கிறார். இதை தான் பல ஆண்டுகளாக காங்கிரஸ் செய்து, மகளிர் இடஒதுக்கீடை தடை செய்து வைத்துள்ளார்கள்.
எந்த ஒதுக்கீடுகளும் தேவையில்லை என்ற நிலைக்கு இன்றுவரை எல்லோரையும் தயார் செய்யாததற்கு யார் காரணம்? ஒதுக்கீடுகள் எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தாது ஏன்? எவ்வளவு ஆண்டுகள் ஒதுக்கீடுகள் தொடரும்?