Load Image
Advertisement

தி.மு.க.,வுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

Intelligence alert to DMK   தி.மு.க.,வுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
ADVERTISEMENT
'மாவட்ட வாரியாக, 23 அணி நிர்வாகிகளை நியமிப்பதில் வெடிக்கும் கோஷ்டி பூசலால், லோக்சபா தேர்தலில் பின்னடைவு ஏற்படும்' என, தி.மு.க., தலைமைக்கு உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

தி.மு.க.,வில் இளைஞரணியை பலப்படுத்தும் வகையில், தன் நேரடி பார்வையில் நேர்காணல் நடத்தி, மாவட்ட வாரியாக புதிய நிர்வாகிகளை, அமைச்சர் உதயநிதி நியமித்தார். தகுதி அடிப்படையில், வேகமாக செயல்படக்கூடிய நிர்வாகிகளை, அவர் தேர்வு செய்துள்ளார்.

மாவட்ட செயலர்களால் பரிந்துரைக்கப்பட்ட, தகுதி இல்லாதவர்களை நிராகரித்தார். இந்த பிரச்னை காரணமாக, சில மாவட்டங்களில், இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தை, மாவட்ட செயலர்களும், எம்.எல்.ஏ.,க்களும், அவர்களின் ஆதரவு நிர்வாகிகளும் புறக்கணித்தனர்.

இதற்கிடையில், கட்சியில் உள்ள, 23 அணிகளுக்கும் மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பதவிகளுக்கு, மாவட்ட செயலர்கள் தங்கள் ஆதரவாளர்களை தேர்வு செய்துள்ளனர். அதில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரையை ஏற்காமல், தன்னிச்சையாக மாவட்ட செயலர்கள் செயல்பட்டுள்ளதாக, புகார் கூறப்படுகிறது.

இந்த காரணங்களால், மாவட்டங்களில் கோஷ்டி பூசல் வளர்ந்துள்ளது என்றும், லோக்சபா தேர்தல் பணிகளில், அது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், ஆளும் மேலிடத்தை, உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: 'புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி, கட்சி நிர்வாகிகளுக்கு எதுவும் செய்யவில்லை' என, நிர்வாகி ஒருவர் கூறிய புகாரை, மாவட்ட செயலர் செல்ல பாண்டியன் ஆதரித்த விவகாரம், இருவருக்கும் இடையே உரசலை உருவாக்கியுள்ளது. திருநெல்வேலியில் மாவட்ட செயலர் ஆவுடையப்பனுக்கு எதிராக, 6 ஒன்றிய செயலர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

கன்னியாகுமரியில், அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் ஆகிய இருவரும், கீரியும் பாம்புமாக வலம் வருகின்றனர். தி.மு.க., அமைப்பு துணை செயலராக ஆஸ்டின் நியமிக்கப்பட்ட பின், கோஷ்டி பூசல் தீவிரமாகி உள்ளது.

சென்னை வட கிழக்கு மாவட்ட செயலர் சுதர்சனத்திற்கும், எம்.எல்.ஏ., சங்கருக்கும் ஏழாம் பொருத்தம். சுதர்சனம் தலைமையில் நடக்கும் கூட்டங்களுக்கு, இளைஞரணி நிர்வாகிகளை அழைப்பதில்லை என, சங்கர் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது.

சென்னை வடக்கு மாவட்ட செயலர் இளைய அருணா தலைமையில், ராயபுரத்தில், அணி நிர்வாகிகளின் அறிமுக கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதை எம்.பி., கலாநிதி, ராயபுரம் எம்.எல்.ஏ., ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் எம்.எல்.ஏ., ஆர்.டி.சேகர், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ., எபனேசர் புறக்கணித்தனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


வாசகர் கருத்து (27)

  • GANESUN - Chennai,இந்தியா

    //எங்க வீட்டு பிரச்சனைகளை நங்கள் பார்த்துக்கொள்வோம்...// இதைத்தான் நாங்களும் சொல்றம்.

  • A1Suresh - Delhi,இந்தியா

    மோடிஜி நாடாளுமன்ற அவசர கூட்டத்தை கூட்டிய பிறகு பழைய நாடாளுமன்ற வாசலில் நின்று ஒரு அறிவிப்பு செய்தார் . அதன்படி இன்னும் 2 தினங்களில் டைனோசர் ஒன்று கிளம்பும். அது தேசவிரோதிகளுக்கு நிரந்தரமாக சம்மட்டி அடியாக இருக்கும் . டைனோசர் பராக் பராக் பாராக்

  • DVRR - Kolkata,இந்தியா

    மாவட்ட செயலர்களால் பரிந்துரைக்கப்பட்ட, தகுதி இல்லாதவர்களை நிராகரித்தார் மறைநிதி. பரிந்துரைக்கப்பட்டவர்கள் தகுதி இல்லாதவர்கள்??????????திருட்டு திராவிட மடியல் அரசில் தகுதி இல்லாதவர்கள் தகுதி என்ன???யாரொருவர் 40% கமிஷன் / பங்கு தரமுடியாதோ அவர்கள் தகுதி இல்லதவர்கள்.

  • BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்

    என்ன தான் உளவு துறை அறிக்கை கொடுத்தாலும் இவர்கள் தன தலையில் தானே மண்ணை அல்லி போட்டு கொள்வார்கள்.

  • Godyes - Chennai,இந்தியா

    ஏம்பா இப்ப எல்லாரும் திமுக பாஜக பக்கம் வந்து குந்திக்கிங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்