சிவகங்கையில் ரயில் நிற்க 10 இடங்களில் மறியல்
சிவகங்கை : மாவட்ட தலைநகர் சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி செப்.23ல் கடையடைப்பு 10 இடங்களில் நடக்கிறது. 2000 பேர் ரயில் மறியல் செய்வதாக முடிவு செய்துள்ளனர்.
சிவகங்கையில் அனைத்து கட்சி மற்றும் பொதுநல அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் அறையில் நடந்தது. நகர தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். துணை தலைவர் கார்க்கண்ணன் கவுன்சிலர் ஜெயகாந்தன், சண்முகராஜன், இந்திய கம்யூ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், உள்ளிட்ட 21 தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள், ஜமாத் தலைவர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், பொது நல சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மாவட்ட தலைநகரான சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நிற்ககோரி செப்.23ல் 10 இடங்களில் ரயில்மறியல் போராட்டம் நடத்துவது, கோரிக்கை நிறைவேறும் வரை ரயிலை சிறைபிடிப்பது என தீர்மானிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!