Load Image
Advertisement

அசைவ உணவகங்களில் சோதனை தீவிரம்

 Test intensity in non-vegetarian restaurants   அசைவ உணவகங்களில் சோதனை தீவிரம்
ADVERTISEMENT
சென்னை: மாநிலம் முழுதும் இறைச்சி மற்றும் அசைவ உணவகங்களில் சோதனை தீவிரமடைந்துள்ளது. தரமற்ற உணவாக இருந்தால் சம்பந்தப்பட்ட கடையின் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடைக்கும்' சீல்' வைக்கப்படும்'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் எச்சரித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 'ஐவின்ஸ்' என்ற உணவகத்தில் செப். 16ம் தேதி உணவு சாப்பிட்ட 42 பேர் வயிற்றுபோக்கு வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கலையரசி 14, என்ற சிறுமி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சோதனை குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'ஐவின்ஸ்' உணவகத்தில் 16ம் தேதி இரவு 200 பேர் உணவு சாப்பிட்டுள்ளனர். அதில் 42 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவகத்தில் சந்தேகப்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த மூன்று உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சேலம் உணவு பகுப்பாய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

இதன் அறிக்கை விரைவில் தெரிய வரும். சந்தேகத்திற்குரிய 42 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு உணவகம் சீல் வைக்கப்பட்டது.

ஷவர்மா மற்றும் சந்தேகத்திற்குரிய சிக்கன் போன்ற உணவு பொருட்களை விற்பனை செய்ய மாவட்டம் முழுதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம்முழுதும் உணவகங்களை ஆய்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Latest Tamil News இதுகுறித்து அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது: மாநிலம் முழுதும் உணவகங்கள் தர கட்டுப்பாட்டில் உள்ளதா என கண்காணித்து பரிசோதனை அடிப்படையில் அபராதம் விதிப்பதுடன் உரிமத்தை ரத்து செய்து கடைக்கு சீல் வைக்கப்படும். இந்த ஆண்டில் இதுவரை 38,191 கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 1.55 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 1894 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

எனவே உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அனைத்து உணவகங்களிலும் உணவு தரமாக உள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் நடந்த சம்பவத்திற்கு துறை ரீதியான விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (8)

  • சண்முகம் -

    சுவர்மா குறைந்த சூட்டில் மெதுவாக சமைக்கப்பட்டு பல நாட்களுக்கு குறைந்த சூட்டிலேயே சுற்றிக்கொண்டு இருப்பதால் இ-கோலை என்ற உயிர்க்கொல்லி கிருமி உண்டாக நிறைய வாய்ப்புகள் உண்டு. சுவர்மாவை சாப்பிடாதிருத்தலே உடலுக்கு நன்று.

  • duruvasar - indraprastham,இந்தியா

    மாசு அய்யா நீங்க நல்லா ஓடுகிறீர்கள். அப்படியே ஒரு ஓட்டம் போயி எல்லா உணவகங்களையும் ஆய்வு செய்யலாமே. அஃப்கோர்ஸ் மாண்புமிகு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி.

  • Jysenn - Perth,ஆஸ்திரேலியா

    DO and FSOs of that area must be taken to task for dereliction of duties and connivance. This raid would benefit not the common man but the above officials. Anyway the officials stand to gain.

  • ponssasi - chennai,இந்தியா

    ஏதேனும் மாவட்ட உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி மகனோ மகளோ பாதிக்கப்பட்டால் கூட இவர்கள் காசு வாங்கிக்கொண்டுதான் இருப்பார்கள். பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள் தமிழர்களே. வியாபார பெருமக்களே உங்களின் பணத்தாசைக்கு மக்களை பலியாக்காதீர்கள்.

  • தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா

    மூர்க்க கும்பலின் அசைவ ஹோட்டல்களில் சாப்பிடும்போது மிகவும் கவனம் தேவை. டுமிழர்கள் வாரம் ஒருமுறை அசைவம் சாப்பிட்டு வந்தவரை இதுபோன்ற பிரச்சனைகள் இல்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்