விவசாய சங்க கூட்டம்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் பேரவை கூட்டம் தலைவர் சகாதேவன் தலைமையில் நடந்தது. மாவட்டச் செயலாளர் மயில்வாகனன், மாவட்ட தலைவர் முத்துராமு முன்னிலை வகித்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக உடனடியாக தரம் உயர்த்த வேண்டும். பெரிய கண்மாய் உட்பகுதியில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டு மாடுகள் மற்றும் வன விலங்குகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேத்திடல், முத்துப்பட்டினம் உள்ளிட்ட கண்மாய்களை தூர்வார வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!