ADVERTISEMENT
திருவாடானை, : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த சிவ பக்தர்கள் உழவாரப்பணியை மேற்கொண்டனர். சுற்றுச்சுவரை சுத்தம் செய்தல், கொடிமரம், சுற்று பிராகரத்தில் உள்ள புதர்கள், செடிகள், சுவாமி வாகனங்கள், சூரிய தீர்த்தத்தை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கூட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!