ADVERTISEMENT
மதுரை : மதுரையில் ராம்ராஜ் காட்டன் சார்பில் நடந்த கலாசார முனைவோர் விழாவில் ரூ.ஒருலட்சம் மதிப்பிலான பட்டு வேட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
நிறுவன தலைவர் நாகராஜன் பேசுகையில், ''மதுரை தமிழ்க் கலாசாரம் மிகுந்த ஊர். இங்குள்ள 4000 பெண்கள் நெசவில் ஈடுபட்டுள்ளனர். சர்வோதய சங்கங்களில் மட்டுமே இருந்த வேட்டியை அனைத்து ஜவுளி கடைகளிலும் கொண்டு வந்து கலாசாரத்தை தக்கவைக்கிறோம். உலகத்திற்கு நாகரீகத்தை கற்றுக்கொடுத்தது பாரத பூமி. நம்மிடம் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என்ற சுதேசி விழிப்புணர்வு ஏற்பட்டால் தான் மாற்றம் ஏற்படும்,'' என்றார்.
நிர்வாக இயக்குநர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குநர் அஸ்வின் பேசுகையில், ''வேட்டியில் 3000 ரகங்கள், வெள்ளை சட்டையில் 150க்கும் மேற்பட்ட ரகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களின் ஏற்ற இறக்கங்களில் பக்கபலமாய் இருப்பது டீலர்கள் தான். மக்களிடம் எங்கள் பொருட்களை கொண்டு சேர்க்கும் மகத்தான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றனர்.
ராஜ்மஹால் நிர்வாக இயக்குநர் முருகானந்தம், திருச்சி தைலா ஏஜன்சிஸ் நிர்வாக இயக்குநர் பிரபு, தேனி ஆனந்தம் நிர்வாக இயக்குநர் நடராஜன், ரூ. ஒரு லட்சம் வேட்டியை அறிமுகப்படுத்தினர்.
மதுரை காபா பேப்ஸ் அஸ்ரப், கிருஷ்ணா பேப்ரிக்ஸ் கிருஷ்ணகுமார், சின்னமனுார் நாராயணன் அன்ட் சன்ஸ் மணி, காரைக்குடி அய்யப்பா டெக்ஸ்டைல்ஸ் சுந்தரேசன், ஆர்.எம்.ஆர்., சில்க்ஸ் சண்முகநாதன், மேலுார் சங்கரலிங்கம் அண்ட் சன்ஸ் ரவிச்சந்திரன், காளையார்கோவில் பூம்புகார் சில்க் ஹவுஸ் முகமது யாசின், சிவகங்கை பாஜி டெக்ஸ் அக்பர் பாதுஷா கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!