மோடி பிரதமர்... பழனிசாமி முதல்வர்... தொண்டர்கள் விருப்பம் என்கிறார் உதயகுமார்
மதுரை, : ''தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமராக மோடி வரவேண்டும். தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்,'' என மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
அ.தி.மு.க., - பா.ஜ., உறவில் தற்காலிகமாக விரிசல் ஏற்பட்ட நிலையில் இருகட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றனர். இந்நிலையில் நேற்று உதயகுமார் கூறியதாவது:
முரண்பாடு இல்லாத கூட்டணி இல்லை. இண்டியா கூட்டணியில் மேற்கு வங்கம், கேரளாவில் கூட்டணி சேரமாட்டோம் என கம்யூனிஸ்ட் கூறுகிறது. டில்லி, பஞ்சாப், குஜராத்தில் இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியின் கருத்து வேறாக உள்ளது. முரண்பாடு எல்லோரிடத்திலும் உள்ளது.
முன்னாள் முதல்வர் பழனிசாமி நிதானத்துடன் பெருமையாக விட்டுக் கொடுத்து வருகிறார். டில்லியில் அவர் அளித்த பேட்டியில் மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டும். ஏனென்றால் 9 ஆண்டு காலமாக வரலாறு காணாத வளர்ச்சியை நாடு கண்டுள்ளது. ஆகவே இந்திய நாடு வளர்ச்சி அடைய வேண்டும்.
தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும் என தெளிவாக குறிப்பிட்டார். தொண்டர்களும், பொதுமக்களும் பிரதமராக மோடி வரவேண்டும். அதேபோல் தமிழகத்தின் முதல்வராக பழனிசாமி வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!