மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் மாணவர்களுக்கு திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கம் சைக்கிள்களை வழங்கினார்.
விழாவில் யூனியன் தலைவர் ராதிகா, காங்., வட்டாரத் தலைவர்கள் சுப்பிரமணியன், மனோகரன், சேகர், திருப்பாலைக்குடி ஊராட்சி தலைவர் உமர் பாரூக் உட்பட பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!