ADVERTISEMENT
பரமக்குடி : பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோடு ஆற்றுப்பாலம் பகுதியில் 2 அடி பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
பரமக்குடி நகராட்சி பகுதி மற்றும் நெடுஞ்சாலையில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு வைகை ஆற்றில் சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டது.
இந்த ரோடு அமைத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆங்காங்கே ரோடு சேதமடைந்து வாகன ஓட்டிகள் விபத்த அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் ஆற்றுப்பாலம் சர்வீஸ் ரோட்டில் குறுக்கிடுவதால் தாழ்தளமாக ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2 அடி பள்ளம் வரை உள்ள இந்த ரோட்டில் ஒவ்வொரு முறையும் சிறிதளவு மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குகிறது.
ஆகையால் டூவீலர் துவங்கி ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் டயர்கள் பள்ளத்தில் சிக்குவதால் சிறிய விபத்து ஏற்படுகிறது.
மேலும் ஆம்னி பஸ் மற்றும் கனரக வாகனங்கள் என இந்த ரோட்டில் செல்ல முடிவதில்லை.
முக்கியமாக பள்ளி பஸ்கள் பேருந்துகள் என செல்லும் போது பள்ளத்தில் சிக்கி சிரமப்படுகின்றனர்.
எனவே சர்வீஸ் ரோட்டை ஒட்டு மொத்தமாக சீரமைக்க நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!