Load Image
Advertisement

தமிழகத்தில் இன்னும் 4 நாள் மழை பெய்யும்

It will rain in Tamil Nadu for another 4 days   தமிழகத்தில் இன்னும் 4 நாள் மழை பெய்யும்
ADVERTISEMENT
சென்னை: 'மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. இன்னும், நான்கு நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், செந்தாமரை கண்ணன் அறிவிப்பு: தென்மேற்கு பருவமழை தீவிரம் பெற்றதால், தமிழகத்தின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில், அனேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும், லேசான மழை பெய்துள்ளது. மாநிலம் முழுதும், 200க்கும் மேற்பட்ட இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாட்டால், வரும், 23ம் தேதி வரை மிதமான மழை தொடரும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். அதிகபட்சம், 35 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (1)

  • Devanand Louis - Bangalore,இந்தியா

    திராவிட மாடல் அரசின் இது ஒரு கண் துடைப்பு நாடகம் - வடிகால் தூர் வாரும் பணிகள் மற்றும் சாலை செப்பனிடும் பணிகள் மழைக்காலங்களில் - மதுரை திருமங்கலம் ஆறுமுகம் ரோடு ரேஷன் கடையின் முன்பு ( ஏர்போர்ட் ரோடு )மலை தண்ணீர் குளம்போல் தேங்குகிறது தினமும் பல வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்குகிறார்கள் ஆனால் தமிழக நெடுஞ்சாலை அலுவலகமும் நகராட்சி அலுவலகமும் ஒன்றும் கண்டுகொள்வதில்லை , இவர்கள் எங்காவது சும்மா கொட்டிக்கிக்கடைக்கும் மண்ணை எடுத்துவந்து இங்குள்ள பள்ளங்களில் போட்டு போட்டோ எடுத்து சாலை செப்பனிட்டதுபோல் அரசுக்கு அனுப்பி வரும்பணத்தை பங்கு போட்டு பிரித்துக்கொள்கிகிறார்கள் . இவர்கள் போடும் மண் வாகனங்கள் செல்லும்பொழுது புழுதியை கிளப்பிக்கிறது அங்கியுலா கடைகள் வணிகவளாகங்கள் மற்றும் வீடுகளுக்குள் புழுதி மற்றும் தூசிகள் மிகவும் மோசமான நிலைமைக்கு உள்ளது , இந்த இடம் வாழ்வதற்கும் வியாபாரம் செய்வதற்கும் இந்த செயற்கை புழுதிகளால் உகந்தஇடமில்லை பலதடவை புகார் அளித்தும் பயனில்லை . உலகத்திலேயே மிகவும் மோசமான புழுதியை உருவாக்குமிடம் இந்தஇடம் இதனால் பலவித உடல்நலக்கோளாறுகள் மற்றும் வியாபாரப்பொருட்கள் பாதிப்புகள் தினமுமரங்கேறுகின்றன . தமிழக முதலமைச்சர் பார்வைவைக்கு தினமலர் கொண்டுசெல்லவேண்டுமென்பது இங்குள்ள வியாபாரிகள் மற்றும் வீடுகளின் மக்களின் வேண்டுகோள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement