ADVERTISEMENT
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் புதிதாக ஆட்டோக்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்ககூடாது, என வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுற்றுலாத் தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் மிகவும் குறுகிய சாலைகள், இங்கு அளவுக்கு அதிகமான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆட்டோக்கள் மட்டுமே 1000 பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வட்டார போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆட்டோக்களுக்கு புதிய பெர்மிட் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஏற்கனவே உள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட நிர்வாகிகள் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.
வட்டார போக்குவரத்து அலுவலர் ேஷக் முகமது, கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு கொடுத்தனர். ராமேஸ்வரத்தில் புதிதாக ஆட்டோக்கள் இயக்குவதற்கு பெர்மிட் வழங்க கூடாது, என தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பெர்மிட் வழங்குவதை நிறுத்தாவிட்டால் செப்.25 ல் குடும்பத்தோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும், என தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!