ADVERTISEMENT
பரமக்குடி, : -பரமக்குடியில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 30ம் ஆண்டு விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் நடந்தது.
பரமக்குடி ஹிந்து முன்னணி சார்பில் 60 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். நகராட்சி 36 வார்டுகளிலும் பல்வேறு இளைஞர்கள் அமைப்புகள் சார்பில் நேற்று முன்தினம் சிறப்பு யாகங்கள் பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து மாணவர்களுக்கான போட்டிகள், உறியடி, விளக்கு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை 5:00 மணிக்கு அனைத்து இடங்களிலிருந்தும் விநாயகர் சிலைகள் மேளதாளத்துடன் புறப்பட்டன.
சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி அருகில் வழிவிடு முருகன் கோயில் முன்பிருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர்கள் கங்காதரன், ரத்ன சபாபதி, பொருளாளர் ஆதித்தன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் குமரன் வரவேற்றார்.
அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக இரவு 8:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் கோயில் படித்துறை முன்பு வைகை ஆற்றில் அனைத்து விநாயகர் சிலைகளும் விஜர்சனம் செய்யப்பட்டது.
திருச்சி கோட்டை செயலாளர் போஜராஜன் பேசினார். விழாவில் நகராட்சி கவுன்சிலர்கள், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி உட்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர் கலந்து கொண்டனர். நகர் பொதுச் செயலாளர் திருமுருகன் நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!