ADVERTISEMENT
ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே சேதுக்கரையில் திதி, தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அவதிப்படுகின்றனர்.ராமநாத புரம் அருகே சேதுக்கரையில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.
கடற்கரை கோயிலான இங்கு அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள்.ஆடி அமாவாசை மாஹாளய அமாவாசை நாட்களில் உயிரிழந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதை ஹிந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். அன்றைய தினம் பிதுர் பூஜை செய்வதால் முன்னோர் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ராமேஸ்வரம் கடற்கரையில் திதி கொடுப்பதை விட சேதுக்கரையில் கொடுப்பது விசேஷம். இங்கு வெளி மாவட்டங்கள், வட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அதிகாலையில் வரும் பக்தர்கள் கடற்கரைக்கு இருளில் செல்லும் நிலை உள்ளது.இங்கு அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்குகளுக்கான துாண் மட்டுமே உள்ளது. விளக்குகள் பொருத்தப்படாமல் உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அச்சமடைகின்றனர்.சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
சுற்றுலா தலமான சேதுக்கரையில் திதி, தர்ப்பணம் செய்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சேதுக்கரை ஊராட்சி நிர்வாகம் உயர் கோபுர மின் விளக்கு எரிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!