Load Image
Advertisement

-வறண்ட பூமி வளமாகுது

- Dry land becomes fertile   -வறண்ட பூமி வளமாகுது
ADVERTISEMENT


ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சார்பில் உயிர் பண்ணை, பசுமையாக்கல் திட்டத்தில் ஆண்டுதோறும் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவை வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.

மேலும் நெடுஞ்சாலைகள், கண்மாய்கள், ஊருணி பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

இதன்படி 2011 முதல் 2019 வரை 11லட்சத்து 53 ஆயிரத்து 203 மரக்கன்றுகள் நடவு செய்தனர். இதில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 729 மரக்கன்றுகள் வளர்ந்துள்ளன. மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வேளாண் துறையுடன் இணைந்து வினியோகம் செய்யப்படுகின்றன.

மேலும் 2020, 2021 ல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் வனத்துறைக்கு மரக்கன்றுகள் வளர்க்க நிதி ஒதுக்கப்படவில்லை.

இந்நிலையில் நடப்பு ஆண்டில் பசுமைத் தமிழகம் இயக்கம், பல்லுயிர் பரவல், பசுமையாக்குதல், காலநிலை மாற்றம் திட்டத்தில் ராமநாதபுரம் வனத்துறை மூலம் மாவட்டத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் வனத்துறை மாவட்ட வன அலுவலர் ேஹமலதா கூறுகையில், தங்கச்சிமடம், கமுதக்குடி, ஆற்றாங்கரை, சாயல்குடி ஆகிய இடங்களில் நர்சரி கார்டன் அமைக்கப்பட்டுள்ளது.

வேம்பு, புங்கன், புளி, தேக்கு மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளிட்ட 50 வகை மரக்கன்றுகள் வளர்க்கிறோம்.

போதுமான இடம், தண்ணீர் வசதி உள்ளதாக ஆய்வு செய்து விவசாயிகள் மட்டுமின்றி பள்ளி, கல்லுாரிகள், தனி நபர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும். இதுபோக வறண்ட பகுதிகள், ஊருணிகளில் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம், என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement