Load Image
Advertisement

செந்தில் பாலாஜி தம்பியை தேடும் அமலாக்கத் துறை

Enforcement Directorate looking for Senthil Balaji brother Ashokumar செந்தில் பாலாஜி தம்பியை தேடும் அமலாக்கத் துறை
ADVERTISEMENT
சென்னை: நான்கு முறை, 'சம்மன்' அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாமல், 'டிமிக்கி' கொடுத்து வரும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை பிடிக்க முடியாமல், அமலாக்கத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி, சென்னை புழல் சிறையில் உள்ளார். இந்த வழக்கில், மற்றொரு முக்கிய குற்றவாளியான செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு, அமலாக்கத் துறை அதிகாரிகள், நான்கு முறை 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.

அவரது மனைவி மற்றும் மாமியார் ஆகியோருக்கும், 'சம்மன்' அனுப்பப்பட்டு உள்ளது; அவர்களும் விசாரணைக்கு ஆஜராகமல், 'டிமிக்கி' கொடுத்து வருகின்றனர். இதனால், வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில் அசோக்குமார் கைது செய்யப்பட்டார் என, ஆகஸ்டில் தகவல் பரவியது. இதை உடனடியாக மறுத்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அவர் பதுங்கி இருக்கும் இடத்தை அறிய முடியாமல் திணறி வருகின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத அமலாக்கத் துறை அதிகாரி கூறுகையில், 'நாகா லாந்து அல்லது கேரளாவில் அசோக் இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று தேடியபோது கிடைக்கவில்லை. நம்பத்தகுந்த தகவல் கிடைத்தவுடன் சுற்றி வளைக்கப்படுவார்' என்றனர்.


வாசகர் கருத்து (18)

 • Paraman - Madras,யூ.எஸ்.ஏ

  கனடாவில் இருக்கும் காலிஸ்தானிய தீவிரவாத கும்பலை அங்கேயே வைத்து போட்டு தள்ளும் மத்திய அரசுக்கு இந்த 21.ம்பக்க திராவிடியா சுண்டெலி எல்லாம் சும்மா ஜுஜுபி ...அசோக்கை உள்ளே தூக்கிவைத்து ஒரு மாதம் மேலாகிவிட்டது ...சும்மா இந்த தத்தி தலை ஓங்கோல் வந்தேறி ஊழல் குடும்ப உறுப்பினர்கள் என்ன வெல்லாம் செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கும், 10.ரூவா பாலாசி விஷயங்களை கொட்டி அப்ரூவர் ஆவதற்கான பிளான் இது என்பது கூட தெரியாமல் இப்பிடி சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் ...கனடா போன்ற நாட்டின் தலைமைக்கே டெல்லிக்கு வரவழைத்து பெரிய ஆப்பு சொருகுபவர்கள்....இந்திய குரல் என்று பேண்டு வாத்தியக்கார கோமாளி மாதிரி வெட்டி போஸ் கொடுத்துக்கொண்டு ஒளறிக்கொண்டு இருக்கும் தத்தி தலைமைக்கும் அதன் ஊத்த வாய் வாரிசிற்கும் எவ்வளவு பெரிய ஆப்பை தயார் செய்து கொண்டு இருப்பார்கள் என்பதை கூலிக்கு மாரடிக்கும் நாற்ற முட்டு கொடுக்கும் 21.ம் பக்க திராவிடியா ஈனப்பிறவிகள் சிந்திக்க வேண்டிய தருணமிது

 • S MURALIDARAN - Chennai,இந்தியா

  காவல் துறை உதவி இல்லாமல் அரசியல் செல்வாக்கு உள்ள ஒருவர் தலை மறைவாக இருக்க முடியாது. கைதியாக உள்ள ஒருவரை அமைச்சராக வைத்திருக்கும் இந்த அரசு இதற்கும் துணை போகிறது.

 • குமரி குருவி -

  கள்ளன் பெரியவனா.?காவல்காரன் பெரியவனா..?

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  சும்மா பீலா உட்றானுங்க. ED கு இந்த தம்மாத்தூண்டு திருடன கண்டுபிடிக்கறது ஒரு மேடறே இல்ல.

 • P.Sekaran - விருத்தாசலம்,இந்தியா

  உறவினர்களின் செல்போன்களை ஆராய்ந்தால் அசோக் இருக்கும் இடம் தெரிந்துவிடும். இப்பொழுதுதான் மாடன் டெக்னாலாஜி வந்து விட்டதே ஏன் இவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இல்லையென்றால் மேலே சொன்ன ராமஜெயம் நிலையாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்