மாணவன் மாயம்
சாத்துார் : வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவர் மகன் யோகேஸ்வரன், 17. அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலையில் நண்பர்களுடன் அணையில் குளிக்கச் சென்றார்.
ஆழமான பகுதிக்குச் சென்ற மாணவன் யோகேஸ்வரன் நீரில் மூழ்கி மாயமானார். வெம்பக்கோட்டை தீயணைப்பு துறை வீரர்கள் தொடர்ந்து மாணவனை தேடி வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!