சென்னை: ''ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை, பா.ஜ., விரும்பவில்லை. எனவே தான் அவர்கள் சமூக நீதிக்கு எதிராக இருக்கின்றனர்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பு நடத்தும், இரண்டாவது தேசிய மாநாடு, புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சமூக நீதியை நிலைநாட்ட, நாம் போராடி வந்தாலும், சமூக நீதிக்கான தடைகளும் இருக்கவே செய்கின்றன. இதில் பா.ஜ., பெரிய அளவிலான தடங்கல்களை செய்து வருகிறது. சமூக நீதியை பா.ஜ., நிலைநாட்டுவது இல்லை. கடந்த ஒன்பது ஆண்டுகளில், மத்திய அரசு துறைகளில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீதம் ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை. ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்கள் முன்னேறுவதை, பா.ஜ., விரும்பவில்லை. எனவேதான் அவர்கள் சமூக நீதிக்கு எதிராக உள்ளனர்.
உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கான நியமனங்களில், அட்டவணை ஜாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் ஓ.பி.சி.,க்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு, இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க, தேவையான அரசியலமைப்பு திருத்தங்களை, மத்திய அரசு கொண்டு வர வேண்டும். பதவி உயர்வு, பணி மூப்பு நிர்ணயம் ஆகியவற்றில், ஓ.பி.சி.,க்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த 2015ல் சேகரிக்கப்பட்ட, சமூகபொருளாதார ஜாதி கணக்கெடுப்பு தரவை, மத்தியஅரசு உடனடியாக வெளியிட வேண்டும்.
மிக முக்கியமாக, இட ஒதுக்கீடு வழங்குதல் என்பது, மாநில அரசுகளின் கையில் இருக்க வேண்டும். அப்போது தான் அந்தந்த மாநிலங்கள், தங்கள் மாநிலங்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வில்சன், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், பீஹார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் வீரப்ப மொய்லி உட்பட பலர் பேசினர்.
வாசகர் கருத்து (32)
எந்த விலையிலும் எங்களுக்கு கே அண்ணாமலை தேவை , EPS/AIADMK கிட்டத்தட்ட முடிந்து தூசி தட்டிவிட்டது. அவர்களுக்கு முதுகெலும்பு இல்லை அல்லது தீயவர்களை எதிர்த்துப் போராடும் துணிச்சல் திமுக மற்றும் ஈபிஎஸ் இப்போது கோழையாகவும், வெகுஜனத்தை இழந்துவிட்டதாகவும் இருப்பதால், பாஜகதான் ஒரே தேர்வு திமுக/அதிமுகவால் முழுவதுமாக அழியும் முன் தமிழகம்.
திரு.கே.அண்ணாமலை அவர்களுக்கு அனைத்து நல்வாழ்த்துக்களும், தயவு செய்து திடமான பாறை போல் முன்னே செல்லுங்கள், படைப்பாளியின் ஆசிகள் உங்களுக்கு உண்டு மேலும் படைப்பாளியின் சாபம் திமுக/அதிமுகவிடம் உள்ளது.
உறங்கிக் கொண்டிருக்கும் இந்து மடங்கள்/பிராமணர்கள்/ மற்றும் பிற இந்து மத குருக்கள் என்று அழைக்கப்படுவதையும் நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன் மற்றும் பிரார்த்தனை செய்கிறேன்.
நீயும் உன்னோட கட்சியும் சமூகத்துக்கே விரோதி நாட்டுக்கு கேடு சர்வநாசம் சாபக்கேடு , நீ உன்னோட கட்சி சீக்ரம் அழிஞ்சு தானாகவே நாட்டுக்கு உண்மையான க்ஷேமம் விடிவுகாலம் விடிமோட்சம் சாபவிமோசனம் , சீக்ரம் நீ உன்னோட கட்சி அழியும் நிறைய சாபம் இருக்கு
ஒரு பட்டியலின திமுக பிரமுகரை துணை முதல்வர் ஆக்குங்கள் முதலில். அப்புறம் சமூக நீதி, சமூக அநீதி என்று உளறி கொட்டலாம்.