ADVERTISEMENT
ஸ்ரீவில்லிபுத்தூர், : வாறுகால்களில் தேங்கும் கழிவு நீரால் சுகாதாரக் கேடு, செயல்படாத மினரல் வாட்டர் பிளாண்ட், தாமிரபரணி குடிநீர் சப்ளையில் தாமதம், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய் தொல்லை என பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 12வது வார்டு மக்கள்.
இந்த வார்டில் ராமகிருஷ்ணாபுரம் பைபாஸ் ரோடு தென்பகுதி, போலீஸ் குடியிருப்பு, கூனங்குளம் வடக்கு தெரு, நடுத்தெரு, தெற்கு தெரு, புது தெரு, கூனங்குளம் மேல் பக்க தெருக்கள் உள்ளன.
இந்த வார்டில் மெயின் தெருக்களில் சிமின்ட் ரோடு, பேவர் பிளாக் ரோடு களாக இருக்கும் நிலையில் சாக்கடைகளில் கழிவுகள் தேங்கி சுகாதார கேடு காணப்படுகிறது.
ராமகிருஷ்ணாபுரம் பைபாஸ் ரோட்டில் தென் பகுதியில் சாக்கடைகள் ஆக்கிரமிப்பால் மழை நேரங்களில் ரோடுகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரோட்டோர மணல் குவியல்களால் டூவீலரில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாரியம்மன் கோயில் மேல்பக்கம் மினரல் வாட்டர் பிளாண்ட் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. கூனங்குளம் தெருக்களில் சாக்கடைகள் தேங்கி கிடக்கிறது. மழை நேரத்தில் தெருக்களில் சாக்கடை நீர் செல்கிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை 5 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்த நிலையில், தற்போது 12 நாட்களை கடந்தும் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது.
வார்டின் அனைத்து தெருக்களிலும் தினசரி தூய்மை பணி செய்தல், அடைபட்டு கிடக்கும் கழிவுகளை அகற்றி கழிவு நீர் தேங்காத நிலையை ஏற்படுத்துதல், குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு ஒரு முறையாவது தாமிர பரணி தண்ணீர் வழங்குதல், செயல்படாத தண்ணீர் தொட்டியை சீரமைத்தல் போன்றவைகளை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என வார்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!