Load Image
Advertisement

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?

Women Reservation Bill: 33% reservation for women: 7 years to wait?   மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்?
ADVERTISEMENT
புதுடில்லி: பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 30 ஆண்டுகளுக்கு மேலான இழுபறிக்குப் பின், தற்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான மசோதா, நடப்பு பார்லிமென்ட் சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டமானாலும், அடுத்து வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் நடைமுறைக்கு வராது. தற்போதைய சூழ்நிலையில், 2029ல்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆறு பக்கங்கள் உள்ள, 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் முக்கிய அம்சங்கள்:



:* லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கான நேரடி தேர்தல்களில், மூன்றில் ஒரு பங்கு தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்

* அதே நேரத்தில் ராஜ்யசபா மற்றும் சட்ட மேலவைகளுக்கு இது பொருந்தாது

* இந்த இட ஒதுக்கீட்டில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு மூன்றில் ஒரு பங்கு உள் ஒதுக்கீடாக வழங்கப்படும்

* ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப் பிரிவினருக்கு சட்டசபைகளில் ஒதுக்கீடு கிடையாது. இதனால், இந்த உள் ஒதுக்கீட்டில், இந்த பிரிவினர் சேர்க்கப்படவில்லை. சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகள் இந்த ஒரு காரணத்துக்காகவே, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து வந்தன.
Latest Tamil News
* கடந்த, 2010ல் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் இடம்பெற்றிருந்த, ஆங்கிலோ -- இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு, தற்போதைய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது.

* மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், ஒவ்வொரு தொகுதி மறுவரையின்போதும், சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படும்

* மேலும் தற்போதைய நிலையில், 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா நடைமுறையில் இருக்கும். அதன்பின், மீண்டும் நீட்டிக்கப்பட வேண்டும்.

* அரசியலமைப்பு சட்டத்தின், 82வது பிரிவு, 2002ல் திருத்தப்பட்டது. இதன்படி, நாடு முழுதும் தொகுதி மறுவரையறை, 2026க்குப் பின் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும். இதன்படி பார்த்தால், 2031 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே, இடஒதுக்கீடு அமலுக்கு வர வேண்டும்.

* ஆனால், 2021ல் மேற்கொள்ள வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 2027ல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கும்.

* அதன்பின், தொகுதி மறுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 2029ல் இருந்து, மகளிர் இடஒதுக்கீடு, நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.


வாசகர் கருத்து (4)

  • kulandai kannan -

    எல்லா கட்சிகளும் சீமானைப் போல் 50 சதவீதம் பெண்களுக்குத் தரலாம். யார் தடுத்தார்கள்? கடைந்தெடுத்த பித்தலாட்டம் தான் இந்த மகளிர் ஒதுக்கீடு.

  • duruvasar - indraprastham,இந்தியா

    அது நடைமுறைக்கு வரும்போது...

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    பாஜக ஆட்சியில் தொடருமேயானால் ஏழு வருஷம் இல்லை. இன்னும் நாற்பது வருடங்கள் கூட ஆகலாம். அவர்களின் இலக்கு என்னமோ எல்லாமே இரண்டாயிரத்து நாற்பத்தேழு தானே. இதெல்லாம் வரும் பாராளுமன்றத்து தேர்தலில் பிஜேபி மக்களுக்கு கொடுக்கவிருக்கும் லாலிபாப்.

  • S.kausalya - Chennai,இந்தியா

    அப்படியென்றால், கட்டு மர குடும்ப பெண்கள் தமிழக முதல்வராக வாய்ப்பு உண்டு போல இருக்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்