விருதுநகரில் கனமழை
விருதுநகர் : விருதுநகர் மாவட்டதில் நேற்று மாலையில் கனமழை கொட்டி தீர்த்தது.
மாவட்டத்தில் மாலை தோறும் மழை பெய்து வரும் சூழலில் நேற்று காலையில் வெயில் வெளுத்து வாங்கியது. மாலையில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில், மாலை 5:00 மணி முதல் விருதுநகர், அருப்புக்கோட்டையில் கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பழைய பஸ்டாண்ட் சுற்றிய பகுதிகள், மதுரை ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கி நீண்ட நேரம் கழித்து வடிந்தன. இதே போல் சாத்துார், ராஜபாளையம் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!