ADVERTISEMENT
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டையில் கொட்டும் மழையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது.
அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 11 விநாயகர் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்., தென் பாரத தலைவர் வன்னியராஜ், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமையில் கொட்டும் மழையில் ஊர்வலம் நேற்று மாலை டி.எஸ்.பி .,அலுவலகம் அருகில் இருந்து மேம்பாலம் வழியாக மதுரை ரோடு, பஜார் பகுதிகள் வழியாக கடந்து பந்தல்குடி ரோட்டில் உள்ள பெரிய கண்மாயில் சிலைகள் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை ரோட்டில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட எஸ்பி., சீனிவாசபெருமாள் தலைமையில் 3 ஏ.டி.எஸ்.பி., கள், 5 டிஎஸ்பிக்கள்., 15 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!