ADVERTISEMENT
ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தை ஆக்கிரமித்து கண்டபடி வாகனங்களை நிறுத்துவதால் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுக்கு எதிரில் இரு சக்கர வாகனங்கள், கார்கள் நிறுத்தப்படுகின்றன. இதில் பலர் வெளியில் இருந்து வந்து அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தை கார் பார்க்கிங் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோல் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்வதால் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுவதால் தவிக்கின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் தினமும் 2000 பேருக்கு அதிகமாக வருகின்றனர்.
இதில் நோயாளிகளின் உறவினர்கள், இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக வருபவர்கள் என அதிகளவில் வாகனங்கள் வருகின்றன.
வாகனங்களை நிறுத்துவதை பகல் நேரங்களில் மருத்துவமனை பணியாளர்கள் ஒழுங்குபடுத்துகின்றனர்.
இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்துபவர்களை கட்டுப்படுத்துவதில்லை. இதனால் வாகனங்களை பாதைகளில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி வாகன டிரைவர்கள் அவசரத்திற்கு வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர்.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் வரும் இருசக்கரம், நான்க சக்கர வாகனங்களை ஒழுங்குபடுத்த முன் வர வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!