நோயாளிகளுக்கு உதவி
திருவாடானை : திருவாடானை அரசு மருத்துவமனையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட உள் நோயாளிகள் போர்வைகள் இல்லாமல் சிரமப்பட்டனர்.
தொண்டி ரோட்டரி சங்கம் சார்பில் 50 நோயாளிகளுக்கு போர்வைகள் வழங்கினர்.
அரசு தலைமை மருத்துவர் எட்வின் மைக்கேல், ரோட்டரி சங்க துணை கவர்னர் வெற்றிவேலன், தலைவர் ஜெயபாண்டி, செயலாளர் மகாலிங்கம், செந்தில்குமார் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!