காங்., கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேட்டி:
சனாதன தர்மம் தொடர்பான எந்த சர்ச்சையிலும் சிக்க காங்கிரஸ் தயாராக இல்லை. அனைத்து மதங்களும் ஒன்றே என, நம்புகிறோம், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.
பன்னீர்செல்வம் ஆதரவாளரான மருது அழகுராஜ் அறிக்கை:
பழனிசாமியோடு ஒப்பிடுகையில், ஊழலை கழித்து பார்த்தால், வேலுமணி திறமையும், அரவணைக்கும் குணமும் கொண்டவர் என்பதை மறுக்க முடியாது. இந்த கருத்து கட்சியில் பரவலாக இருக்கிறது. இதை அறிந்து கொண்டே, வேலுமணி ஆதவராளர்களை கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து ஓரம் கட்ட, பழனிசாமி முடிவெடுத்திருக்கிறார். இதையறிந்த வேலுமணி, கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில் பேட்டி:
தேர்தல் வாக்குறுதிகளில், 99 சதவீதம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் சொன்னது பொய். இதை கண்டித்து, செப்., 29ம் தேதி, சென்னை கோட்டையை நோக்கி, 10,000 ஆசிரியர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி நடக்கும்.
பா.ம.க., தலைவர் அன்புமணி பேட்டி:
ஆறு மாதங்களாக லோக்சபா தேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தி பணி செய்து வருகிறோம். கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம். ஒரே நாடு, ஒரே தேர்தல் தேசிய கட்சிகளுக்கு தான் சாதகமாக இருக்கும். மாநில கட்சிகளுக்கு பாதகமாக இருக்கும்.
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:
தமிழகத்தில் நடப்பாண்டில், 4,048 பேருக்கும், இந்த மாதத்தில் மட்டும் இதுவரை, 300க்கும் அதிகமானோருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று பேர் இறந்துள்ளனர். டெங்குவை தடுக்க, தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில், 'ஏடிஸ்' கொசுவை ஒழிப்பது தான் ஒரே வழி. இதை உணர்ந்து, கொசு ஒழிப்பு பணியை, தமிழகம் முழுதும் அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
வாசகர் கருத்து (9)
நம்ம படிச்ச பாடம் அப்படி..?
கொசு ஒழிப்பு பத்தி உதய நிதியிடம் ஆலோசனை கேட்கவும் நல்ல ஆராய்ச்சி ஆளர்
செட்டியார்கள் அறக்கட்டளையில் பல கோயில்கள். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு மாட்டு வண்டிகளுடன் பாத யாத்திரைகள் மேற்கொள்வர். வடக்கெ கிரூஷ்ன பரமாத்ம இளமை காலத்தில் வாழ்ந்த பிருந்தாவனத்தில் நம் செட்டியார் குடும்பத்தால் நம் ஊர் மாதரி கோபுரம் கட்டிய கோயில் உள்ளது அந்த கோயில்ஊழியர்கள், சாஸ்திரிகள், நாதஸ்வர கலைஞர்கள் முதலான எல்லோருக்கும் மாத சம்பளம் கொடுத்து நிர்வாகித்து வருகிறார்கள்.செட்டியார்கள் ஆன்மிக வாதிகள் காசியிலு விஸ்வநாதர் கோயிலுக்கு தொண்டு செய்கிறார்கள்
ஏன் சூடு பலமோ
சாதி வாரி பாஜக கிளைகள் தொடங்கப்பட்டது ஏதோ சதி எனப்படுகிறது. நாடு விளங்காது.