70 வயதான ஓய்வூதியருக்கு 10 சதவீதம்கூடுதல் ஓய்வூதியம் வழங்க தீர்மானம்
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் மாவட்ட அனைத்து துறை ஓய்வூதியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் 70 வயது நிரம்பியவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட அனைத்து ஓய்வூதியர்கள் நலச்சங்கம், மூத்த குடிமக்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் என்.ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் டி.நாகரெத்தினம் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் தேவராஜ் வரவு செலவு அறிக்கை வாசித்தார். பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள், கோரிக்கைகளை சீதாலட்சுமி வாசித்தார்.
எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் பெறும் ஓய்வூதியத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுவது போல் ஓய்வூதியர்களுக்கும் வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு வழங்கும் ஓய்வூதியர் மருத்துவப்படி 1000 ரூபாயை மாநில அரசும் வழங்க வேண்டும். ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியருக்கு வழங்கப்படும் பண்டிகை முன் பணத்தை ரூ.4000த்தில் இருந்து ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகை 500 ரூபாயை 1000 ஆக உயர்த்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!