அறிவிக்கப்படாத மின்தடை முதுகுளத்துார் மக்கள் அவதி
முதுகுளத்தூர், : -முதுகுளத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து முதுகுளத்தூர் பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காலை, மாலை, இரவு ஆகிய நேரங்களில் அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
மக்கள் கூறுகையில், குறைந்தளவு மின்சாரத்தால் வீட்டில் உள்ள மிக்சி, குக்கர், பிரிட்ஜ், டிவி உட்பட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் பழுது ஏற்படும் அபாயம் உள்ளது.
இரவு நேரங்களில் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.
அலுவலக நேரங்களில் மின் தடையால் பணியாளர்கள் சிரமப்படுகின்றனர். மின்தடை காரணம் தெரியாமல் புலம்புகின்றனர். எனவே இனிவரும் நாட்களில் மின்தடை ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!