Load Image
Advertisement

அமெரிக்க மியூசியத்தில் தமிழகத்தின் பொக்கிஷம்

Buddha Statue:Ponn Manickavel: Treasure of Tamil Nadu in American Museum   அமெரிக்க மியூசியத்தில் தமிழகத்தின் பொக்கிஷம்
ADVERTISEMENT
நாகப்பட்டினம்: ''தமிழகத்தின் கலாசார பொக்கிஷமான நாகை சூடாமணி விஹாரத்தில் இருந்த 17.50 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தர் சிலை கடத்தப்பட்டு அமெரிக்காவில் பதுக்கப்பட்டுள்ளது; அரசு மீட்க வேண்டும்'' என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.

நாகையில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் முதலாம் குலோத்துங்க சோழர் 21வது ஆட்சி காலத்தில் மலேயா ஜாவா சுமத்ரா போன்ற இந்தோனேஷிய தீவுகளை ஆட்சி செய்த மாற விஜயதுங்கவர்மனுக்கும் சோழர்களுக்கும் அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான உறவு இருந்தது.

அப்போது விஜயதுங்க வர்மனால் நாகையில் 'புத்த விஹாரம்' கட்டப்பட்டு 'ராஜராஜ பெரும்பள்ளி' என அழைக்கப்பட்டது. இதற்கு சூடாமணி விஹாரம் என்ற பெயரும் உள்ளது.

சோழ பேரரசன் ஸ்வஸ்திஸ்ரீ ராஜராஜ தேவர் இறப்புக்கு பின் அவரது மகன் ராஜேந்திர சோழர் 600 ஏக்கர் நிலத்தை இந்த புத்த விஹாரத்திற்கு 'இந்த பூமி இருக்கும் வரை சொந்தம்' என்று எழுதி வைத்துள்ளார்.

பின் கிறிஸ்தவ சபையினர் 1861ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியினரிடம் இருந்த புத்த விஹாரத்தை வாங்கி 1867ல் இடித்துள்ளனர். அப்போது இங்கிருந்த 350க்கும் மேற்பட்ட தொன்மையான சிலைகள் பிரிட்டிஷ் மியூசியத்திற்கு சென்றுள்ளன.

Latest Tamil News
கடந்த 2003க்கு முன் 133 செ.மீ. உயரமுள்ள புத்தர் சிலை நாகையில் இருந்து சென்னைக்கு கடத்தப்பட்டு அங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு கடத்தப்பட்டுள்ளது.

பின் 2008ல் பரிமாற்ற அடிப்படையில் சிங்கப்பூர் ஏசியன் சிவிலிசேஷன் மியூசியத்தில் சில ஆண்டுகள் வைக்கப்பட்டு திரும்பவும் நியூயார்க் சென்றுள்ளது. இதன் மதிப்பு 17.50 கோடி ரூபாய் என விலை வைத்துள்ளனர்.

கடத்தல் விவகாரம் 2020ல் தெரிய வருகிறது. கடத்தலில் தொடர்புடைய அனைவரும் தற்போது உயிரோடு உள்ளனர். நீதித்துறைக்கு தெரியக்கூடாது என்பதற்காக ஹிந்து சமய அறநிலையத் துறையும் போலீசாரும் மவுனம் காக்கின்றனர்.

தமிழர்களின் தொன்மைக்கும் கலாசாரத்திற்கும் ஆசிய கண்டத்தையே வெற்றி கொண்டு ஆட்சி செய்த சோழ பெருவேந்தர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமெரிக்கா நியூயார்க் ஆம்ஸ்டர்டாம் அவென்யூ பகுதியில் இருக்கும் புத்தர் சிலையை மீட்டு கொண்டு வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (5)

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    திரும்ப இங்கே கொண்டு வந்தா அதை வித்து குடிக்க ஆளிருக்கு ....

  • Dharmavaan - Chennai,இந்தியா

    இதை நீதிதிமன்றம் சுயமாக எடுத்து விசாரிக்குமா

  • Dharmavaan - Chennai,இந்தியா

    ippothu

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    இது வேறு பத்திரிக்கைகளில் செய்தியாக கூட வராது .அவ்வளவு தான் நாம்

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    வெள்ளைக்காரர்களும் ஸ்பானியர்களும் சரித்திரத்தை ஒரி துரும்பு கூட மிச்சமில்லாமல் அழித்து விடுவார்கள். கருங்கல்லும், மக்களின் ஆத்மாவும் சனாதன தர்மத்தையும், கலாச்சாரத்தையும் சுமந்துகொண்டு இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பாதியை அழித்து மீதியை துரோகிகள் மூலம் பணம் பண்ணினார்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement