விபத்தில் சிக்கிய ஆசிரியையை மருத்துவமனையில் சேர்த்த தாசில்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூரில் விபத்தில் சிக்கிய தனியார் பள்ளி ஆசிரியை பூமதியை, அவ்வழியாக வந்த தாசில்தார் செந்தில்குமார் தனது ஜீப்பில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டியை சேர்ந்தவர் பூமதி, 40, தனியார் பள்ளி ஆசிரியை. இவர் நேற்று மாலை பள்ளியில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு திரும்பும் போது கீழரத வீதி சந்திப்பில் ரோட்டை கடக்கும் போது மினிவேன் மோதியதில் கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் செந்தில்குமார், அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் விசாரித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!