போலீஸ் செய்திகள்
கவுன்சிலர், கணவர் மீது தாக்குதல்
விருதுநகர்: நேருஜி நகரை சேர்ந்தவர் ஆஷா 33. விருதுநகர் நகராட்சி 5 வது வார்டு தி.மு.க.,கவுன்சிலர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாரீஸ்வரிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்து வந்தது. செப். 17 ல் நடந்த விநாயகர் சிலை கண் திறப்பு நிகழ்ச்சியில் அதே பகுதி மகேஸ் என்பவருடன் மாரீஸ்வரி மகன்கள் சந்துரு, சஞ்சய் தகராறு செய்தனர். இதை விலக்கி விட சென்ற கவுன்சிலர் கணவர் மூர்த்தி, கவுன்சிலர் ஆஷா, அவரது தாய் பூமாரியையும், சந்துரு, சஞ்சய் , சந்தோஷ் , சரவணன் சேர்ந்து கீழே தள்ளி தாக்கினர். இதில் மாரீஸ்வரி கொடுத்த புகாரில் மகேஷ், மூர்த்தி, ஆஷா, பூமாரி ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். விருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆடு மேய்த்தவர் மீது தாக்குதல்
விருதுநகர்: மத்தியசேனை பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் 29. ஆடு மேய்ப்பவர். சம்பவத்தன்று மத்திய சேனை பகுதியில் பட்டாசு ஆலைக்கு சொந்தமான இடத்தில் ஆடுகளை மேய்த்துள்ளார். பக்கத்து இடத்து சொந்தக்காரர் படுகளம் இங்கே மேய்ககூடாது என தகாத வார்த்தைகளால் திட்டி கம்பால் அடித்துள்ளார். சிறிது துாரம் சென்ற தனசேகரன் மயங்கி விழுந்துள்ளார். விருதுநகர் அரசு மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
அலைபேசி கடையில் திருட்டு
சிவகாசி: நாரணாபுரம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் கணேசன் 33. இவர் அதே பகுதியில் அலைபேசி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி சென்ற நிலையில் மர்ம நபர்கள் கடையை உடைத்து உள்ளிருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்புள்ள 18 அலைபேசிகளை திருடிச் சென்றனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி எஸ்.ஐ., காயம்
விருதுநகர்: வச்சகாரப்பட்டி போலீஸ் ஸ்டேசனில் எஸ். ஐ., யாக பணிபுரிபவர் ராஜேஸ் 58. செப். 17 ல் இரவில் சாத்துார் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையை டூவிலரில் கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னை மதுராந்தகம் சேர்ந்த மைக்கேல் பிரதீஸ் 38, வந்த கார் ராஜேஸ் மீது மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வச்சகாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருட்டு
விருதுநகர்: முத்துராமன்பட்டி சேர்ந்தவர் பார்த்திபன் 27. இவர் டூவீலரை தன் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். செப். 2 முகம் தெரியாத நபர் பார்த்திபன் பயன்படுத்திய வாகனத்தை எடுத்து சென்றார். விருதுநகர் கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
மாரடைப்பால் அரசு பஸ் டிரைவர் பலி
ராஜபாளையம்: தென்காசி மாவட்டம் பெத்தநாடார் பட்டியை சேர்ந்தவர் கார்மேகன் 47. தென்காசி அரசு டெப்போ டிரைவர். ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து தென்காசிக்கு செல்லும் வழியில் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் மதியம் 1:00 மணிக்கு பஸ்சை நிறுத்தி உள்ளார். நெஞ்சு வலி அதிகம் இருப்பதாக சக டிரைவர்களிடம் கூறியதால் உடனடியாக மற்றொரு பஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு டாக்டர் பரிசோதனை செய்யும் போதே இறந்து விட்டார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!