ADVERTISEMENT
விருதுநகர்: பல் சிகிச்சை பிரிவிற்கு ரூ. 2.75 லட்சம் மதிப்பிலான முழுவதும் சென்சாரில் இயங்கும் புதிய பல் சிகிச்சை நாற்காலியை மக்கள் பயன்பாட்டிற்கு விருதுநகர் மருத்துவக் கல்லுாரி முதல்வர் சங்குமணி துவக்கி வைத்தார்.
விருதுநகர் புதிய அரசு மருத்துவமனையில் பல் சிகிச்சை பிரிவில் 2021 ல் 5837 பேரும், 2022 ல் 8558 பேரும், 2023 ஜனவரி முதல் ஜூன் வரை 6210 பேரும், ஜூலையில் 1186 பேரும், ஆக. ல் 1165 பேரும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
பற்களில் மேற்கொள்ளும் சிறிய அறுவை சிகிச்சையில் 2021 ல் 1337 பேரும், 2022 ல் 1958 பேரும், 2023 ஜன. முதல் ஜூன் வரை 2037 பேரும், ஜூலை யில் 544 பேரும், ஆக. ல் 404 பேரும் பயன்அடைந்துள்ளனர்.
பல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் மக்களின் வருகை அதிகரிப்பதால், கல்லுாரி முதல்வர் ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் கூடுதலாக முழுவதும் சென்சாரில் இயங்கும் பல் சிகிச்சை நாற்காலியை நேற்று துவக்கி வைத்தார்.
இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை விரைவாக செய்ய முடியும். தனியார் மருத்துவமனைகளில் செய்யும் கீழ்தாடை, மேல்தாடை அறுவை சிகிச்சைகளும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் பல் சிகிச்சை பிரிவில் செய்யப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!