பாரம்பரிய காய்கறி விவசாயிகளுக்கு விருது
சிவகங்கை : பாரம்பரிய காய்கறி சாகுபடியில் சிறந்து விளங்கும் சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு விருது வழங்கப்படும் என தோட்டக்கலை துணை இயக்குனர் சக்திவேல் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை மாவட்டத்தில் சொந்த அல்லது குத்தகை நிலங்களில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகள், அதிகளவில் பாரம்பரிய காய்கறி ரகங்களை அங்கக முறையில் மீட்டெடுத்தல், பாரம்பரிய காய்கறி விதைகளை பிற விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தல், முறையான நீர் மற்றும் மண்வள மேம்பாடு போன்ற காரணத்தின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்வார்கள்.
விவசாயிக்கு முதல்பரிசு ரூ.15,000, இரண்டாம் பரிசு ரூ.10,000 மற்றும் சான்று வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் அல்லது வட்டார அளவில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை செப்.26க்குள் தோட்டக்கலை துணை, உதவி இயக்குனர், சிவகங்கை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!