Load Image
Advertisement

குக்கர், அயர்ன் பாக்ஸ் கொடுத்தோம் உளறி கொட்டிய முதல்வரின் மகன் 

 We gave the cooker, iron box, the son of the chief minister    குக்கர், அயர்ன் பாக்ஸ் கொடுத்தோம் உளறி கொட்டிய முதல்வரின் மகன் 
ADVERTISEMENT


மைசூரு, : ''தேர்தலின் போது வருணா தொகுதி வாக்காளர்களுக்கு, முதல்வர் சித்தராமையா குக்கர், அயர்ன் பாக்ஸ்களை பரிசாக கொடுத்தார்,'' என்று, அவரது மகன் யதீந்திரா உண்மையை உளறி கொட்டியுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். மைசூரு வருணா தொகுதியில் இருந்து, கர்நாடகா சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில், மைசூரின் நஞ்சன்கூடில் மடிவாளா சமூக கூட்டம், நேற்று முன்தினம் இரவு நடந்தது.

இந்த கூட்டத்தில் முதல்வர் சித்தராமையாவின் மகனும், வருணா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான யதீந்திரா பேசுகையில், '' தேர்தலின் போது வருணா தொகுதி மடிவாளா சமூக மக்களுக்கு குக்கர், அயர்ன் பாக்ஸ்களை பரிசாக கொடுக்க வேண்டும் என்று, மடிவாளா சமூகத்தின் மாநில தலைவர் நஞ்சப்பா விரும்பினார்.

''அவர் விருப்பத்தின்படி, மடிவாளா சமூக வாக்காளர்களுக்கு, குக்கர், அயர்ன் பாக்ஸ்களை கொடுத்தோம். சில காரணங்களால் பரிசு பொருட்கள் கொடுப்பது, இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. அப்பாவிடம் தேதி குறித்து, மூன்றாவது முறை குக்கர், அயர்ன் பாக்ஸ்களை கொடுத்தோம். அதற்கு பலன் கிடைத்தது. எனது அப்பாவுக்கு ஆதரவு வழங்கிய, மடிவாளா சமூகத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்,'' என்று பேசினார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ''யதீந்திரா கூறியதை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது.

''அவர் கூறியதில் உண்மை இருந்தால், தேர்தல் ஆணையம் தீவிரமாக எடுத்து கொண்டு விசாரிக்க வேண்டும். சித்தராமையாவுக்கு எதிராக ஏற்கனவே, தேர்தல் தகராறு மனு நீதிமன்றத்தில் உள்ளது,'' என்றார்.

மகன் உண்மையை உளறியதால், முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (12)

  • R SRINIVASAN - chennai ,இந்தியா

    இந்தியாவில் ஊழலை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் கட்சிதான் -இந்திரா காந்தியின் காலத்திலிருந்து .உதாரணம் நகர்வாலா கேஸ்.

  • Dv Nanru - mumbai,இந்தியா

    அப்போ கர்நாடகாவில் குக்கர் ஆட்சி நடக்குது சொல்லுங்க ...

  • r srinivasan - chennai,இந்தியா

    இதல்லாம் ஓல்ட் டெக்னீக். நம்ம திமுக கேட்டால் நல்ல ஐடியா கொடுப்பார்கள். திருடுவதில் கை தேர்ந்தவர்கள்

    • Ravi Devaraj - హైదరాబాద్ ,இந்தியா

      உனக்கும் அதைச் செய்ததில் முன்னனுபவம் போல. ஐடியா கொடுக்கிறாய்.

  • Krish - Salem,இந்தியா

    மண்டையில் முடி இல்லை இல்லை

  • K V Ramadoss - Chennai,இந்தியா

    தெரிந்த விஷயம்தான்....பணமோ பரிசுப்பொருளோ கொடுத்து ஒட்டு வாங்குவது எல்லா கட்சியும் செய்கின்றன. இதை தடுக்க தேர்தல் கமிஷனுக்கு முதுகு எலும்பு இல்லை. தேர்தலுக்கு முன் வோட்டர்களுக்கு பணம் கொடுப்பதோ அல்லது ஜெயித்தால் பணமோ பொருளோ இனாமாக கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுப்பதும் ஒன்றுதான். இதை ஏன் தேர்தல் கமிஷனோ அல்லது நீதிமன்றமோ தடுப்பதில்லை ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement