சாத்துார் தனியார் மருத்துவமனை முன் காத்திருப்பு போராட்டம்
சாத்துார், : சாத்துார் தனியார் மருத்துவமனை அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம் நடத்த முயன்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்துார் தனியார் மருத்துவமனையில் சில வாரங்களுக்கு முன்பு செவிலியருக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் ஆந்திர மாநிலம் கர்னூல் சேர்ந்த டாக்டர் ரகுவீர் ,39. போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தலைமை மருத்துவர் கிருஷ்ணவேணியை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைமை மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தியும் மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கோரியும் தலித் விடுதலை இயக்கம் சார்பில் நேற்று காலை 11:15 மணியளவில் மாநில மாணவர் அணி செயலாளர் பீமாராவ் தலைமையில் 21 பேர் மருத்துவமனையை முற்றுகையிட முயன்றனர்.
போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்று திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். மருத்துவமனைக்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!