கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபகாலமாக, பிரதான அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களை குறிவைத்து, சமூக வலைதளங்களான பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இழிவான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., ஏ.ஏ.ரஹிமின் மனைவி அம்ருதா சதீஷன், 'கோட்டயம் குஞ்சச்சன்' என்ற பேஸ்புக் கணக்குக்கு எதிராக, கடந்த 17ம் தேதி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதே போல், மறைந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகள்கள் மரியா உம்மன், அச்சு உம்மன் ஆகியோரும், ஆன்லைனில் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக புகார் அளித்து உள்ளனர். இது போன்று, பல்வேறு அரசியல்வாதிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, கேரள சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'ஆன்லைன் துன்புறுத்தல் குறித்த புகார்களை விசாரித்து வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
வாசகர் கருத்து (5)
இந்த மாதிரி குடும்ப பெண்களை அவமானப்படுத்தும் மனிதன் எவனாயினும், கழுத்தை ஆறுக்கவேண்டும். இது மற்றவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்.
ஆயிரமாயிரம் போலி கணக்குகள் அரசியல் கட்சிகளின் பெயரில் துவங்கபடுகின்றன. அவற்றில் பல பெரும்பாலும் உண்மைக்கு புறம்பாக தான் பதிவுகளை இடுகின்றன. அரசு இனி அனைவரும் ஆதார் என்னை சமூக வலைத்தள கணக்கில் இணைக்க வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். ஆதாரமற்ற பதிவுகளை போட்டால் அவர் தான் அதற்க்கு தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்னும் விதியும் சட்டத்தில் வர வேண்டும். அயல் நாட்டில் இருந்து செய்தால் கூட இப்போது எதையும் கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது.
தமிழகத்தில் இது போல நடவடிக்கை எடுத்தால் தீம்கா ஐடி விங்தான் முதலில் மாட்டும். தலைமையே பெரியார் சுதந்திரத்துக்கு பாடுபட்டார் என்று பச்சையாக பொய் சொல்லும் பொழுது ஐடி விங் சொல்லும் பொய்கள் 99.999% சுத்தமானதாகத்தானே இருக்க வேண்டும். அது போக அடிமைகள் பெனாமி போல பல இணையத்தளம் நடத்துகிறார்கள் - அதிலும் பொய் தொழிற்சாலைகள் சிறப்பாக இயக்கப்படுகிறது...
அது மட்டுமா, தற்போது தேர்தல் வாக்குறுதிகளில் நூறு சதவிகிதம் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்வதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த விஷயத்தில் திராவிட சித்தாந்தத்திற்கும் சகாவுக்கள் சித்தாந்திற்க்கும் வேறுபாடுகிடையாது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.